அவன்லாம் ஒரு ஆளுன்னு டீம்ல எடுக்குறீங்களே..? ஆள மாத்துங்கப்பா.. சன்ரைசர்ஸ் அணிக்கு முன்னாள் வீரரின் அட்வைஸ்

By karthikeyan VFirst Published May 4, 2021, 7:15 PM IST
Highlights

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விஜய் சங்கருக்கு அப்பாற்பட்டு யோசித்தாக வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசனில் சன்ரைசர்ஸ் அணி படுமோசமாக ஆடி, பாதி லீக் சுற்றில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஐபிஎல் 14வது சீசன் கொரோனா அச்சுறுத்தலால் தற்போதைக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், சன்ரைசர்ஸ் அணி செய்ய வேண்டிய மாற்றம் குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

ரெண்டுங்கெட்டான் ஆல்ரவுண்டராக இருக்கும் விஜய் சங்கருக்கு பதிலாக அபிஷேக் ஷர்மாவை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விஜய் சங்கர் இடத்தில் வேறொரு வீரரை யோசிக்க வேண்டும். அவர் சரியாக ஆடாத நிலையில், அவரது இடத்தில் அபிஷேக் ஷர்மாவை இறக்கலாம் என்று தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, ராஜஸ்தானுக்கு எதிராக பவுலிங்கில் 3 ஓவர்கள் வீசி 42 ரன்களை விட்டுக்கொடுத்தது, ஃபீல்டிங்கில் ஜோஸ் பட்லரின் கேட்ச்சை கோட்டைவிட்டது, பேட்டிங்கில் 8 பந்தில் 8 ரன் மட்டுமே அடித்தது ஆகியவற்றை சுட்டிக்காட்டி 3டி பிளேயர் விஜய் சங்கர் என்று கிண்டலடித்துள்ளார்.

விஜய் சங்கர் இந்த சீசனில் பல போட்டிகளில் நன்றாக பேட்டிங் ஆடி சன்ரைசர்ஸுக்கு போட்டியை ஜெயித்து கொடுக்க வாய்ப்பிருந்த நிலையில், அவையனைத்தையுமே கோட்டைவிட்டு, இந்த சீசனில் வெறும் 111 ஸ்டிரைக் ரேட்டுடன், 11.6 என்ற சராசரியுடன் 58 ரன்கள் மட்டுமே அடித்தது குறிப்பிடத்தக்கது.

click me!