கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது. ஏன் தெரியுமா?

By Dinesh TG  |  First Published Oct 11, 2022, 9:24 PM IST

கல்லடி பட்டாலும் படலாம் ஆனால் கண்ணடி மட்டும் படவே கூடாது என்று நமது முன்னோர்கள் சொல்வார்கள்.  மோசமான  வீரியம் கண் திருஷ்டிக்கு உள்ளது என்பதை நம் முன்னோர்கள் அனுபவப் பூர்வமாகவே உணர்ந்திருக்கிறார்கள். இந்த கண்ணடி தான் நாம் கண்திருஷ்டி என்று அழைக்கிறோம்.


குழந்தைகள்  முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஏதோ ஒரு வகையில் கண் திருஷ்டிக்கு உள்ளாகிறார்கள்.  மனிதர்கள் மட்டும் அல்லாமல்  தொழில் புரிபவர்கள்,தொழில் நடக்கும் இடங்களில் கூட   கண் திருஷ்டியை ஒழிக்க வேண்டி,  அமாவாசை நாட்களில் பூசணிக்காயை உடைப்பார்கள். பூசணிக்காயின்  நடுவில் சிறிய குழி வெட்டி, ஓட்டை போட்டு சில்லறை நாணயங்களைச் சேர்த்து, அதில் மஞ்சள் குங்குமம் தடவி நான்கு வீதி கூடும் இடங்களில் உடைத்து எறிவார்கள். இதனால் தொழிலில் இருக்கும் கண் திருஷ்டி குறையும். எதிரிகள் வலுவிழப்பார்கள் என்பது நம்பிக்கை. 

 பிறந்த குழந்தைகளுக்கு தான் அதிகமாக கண் திருஷ்டி ஏற்படும். அதனால் குழந்தை பிறந்த வீட்டில் அன்றாடம் அல்லது ஞாயிறு, வியாழன் ஆகிய இரண்டு நாட்களில் நிச்சயம் திருஷ்டி சுத்தி போடுவார்கள். குழந்தையின் மீதிருக்கும் கண் திருஷ்டியைப் போக்க, கல் உப்பை கையில் வைத்தப்படி மூன்று முறை அங்கப்பிரதட்சண முறையில் சுற்றுவார்கள். கல் உப்பு, தேங்காய் மூடி, கற்பூரம், சமயங்களில் மூன்று வீடுகளின் ஓலைக்குச்சிகள் போன்ற அனைத்தும் திருஷ்டி கழிக்க பயன்படும். இதன் மூலம் கெட்ட சக்திகளும் குழந்தைகளை நெருங்காது என்பது நம்பிக்கை. 

Tap to resize

Latest Videos

பெரியவர்களுக்கு  திருஷ்டி ஏற்பட்டிருக்கிறது என்பதை சில அறிகுறிகள் மூலம்  அறியலாம். கண் திருஷ்டி பட்டவர்களுக்கு உடல் எப்போதும் அசதியாகவும், சோர்வாகவும் இருக்கும். எந்த வேலை செய்தாலும் மனம் அதில் முழுமையாக ஈடுபடாது.  அடிக்கடி கொட்டாவி விட்டப்படியே இருப்பார்கள். தூக்கமும் வராது. ஆனால்  எந்த நேரமும் தூக்கத்தில் இருப்பது போல் படுக்கையில் இருக்கவே  தோன்றும். இந்த அறிகுறியை கண்டதோடு கண் திருஷ்டியை கழிக்க செய்யலாம். 

கண் தி ருஷ்டி நம்மீது அதிகமாக இருக்கிறது என்பதை உணர்ந்தால் அமாவாசை நாள் வரை காத்திருப்பது அவசியம்.   வயதில் மூத்தவர்களே திருஷ்டி கழித்திட வேண்டும். அமாவாசை அன்று புண்ணிய நதி அல்லது  கடல் நீரைக் கொண்டு வந்து திருஷ்டி கழித்தால் பலன் அதிகம் .  மேலும்  வீட்டில் மூலை முடுக்கெல்லாம் தெளித்து வைத்தால், வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளும் சேர்ந்து  ஓடி விடும் என்பது ஐதிகம். 

ஆஞ்சநேயரின் எட்டு சிறப்புகள் பற்றி தெரியுமா?

ஒருவேளை பெரியவர்கள் இல்லாத பட்சத்தில் இடது கையில் கல் உப்பை நிரப்பி நீங்களே மூன்று முறை அங்கபிரதட்சணமாக தலையை சுற்றி அதை ஓடும் நீரில் இடவேண்டும் அல்லது எலுமிச்சைப்பழம் திருஷ்டி நீக்க மிகவும் சிறந்தது. இதை இரண்டாக வெட்டி மஞ்சள் குங்குமம் தடவி வலப்பக்கமாக மூன்று முறையும், இடப்பக்கமாக மூன்று முறையும் சுற்றி எறிய வேண்டும். அப்படி வீசும் எலுமிச்சையை யார் காலிலும் படாமல் எறிய வேண்டும் என்பதையும் மனதில் கொள்ளவும்.

சிவன் வழிபாடு இப்படிதான் இருக்க வேண்டும்!

வீட்டில்  திருஷ்டி தாக்காமல் இருக்க வாசலின் நுழைவாயிலில் கண் திருஷ்டி போக்கும் கற்றாழையை மாட்டி வைக்கலாம். ஆளுயரத்திற்கு கண்ணாடியை வீட்டின் நுழைவாயிலிலேயே   மாட்டி வைப்பதன் மூலமும் திருஷ்டி கழிக்கலாம்.  

கண் திருஷ்டி பிள்ளையார் படங்கள் விற்கிறது அதை மாட்டி வைக்கலாம்.  தூய்மையான நீரில் எலுமிச்சம் பழத்தை போட்டு வைக்கலாம். ஏனென்றால் எலுமிச்சைக்கு தீய எண்ணங்களைக் கொண்டவர்கள் பாதம் பட்டாலும் அவர்களது எதிர்மறையான எண்ணங்கள் வீட்டிற்குள் பரவுவதை தடுக்கும் சக்தி உண்டு.

click me!