சப்த கன்னியருக்கு பெண் தெய்வ வழிபாட்டிலும், சக்தி வழிபாட்டிலும் அல்லது கிராம தெய்வ வழிபாடுகளிலும் முக்கிய இடமுண்டு. இந்த சப்த கன்னியர்கள் பிராம்மி, மகேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆகிய ஏழு தெய்வங்கள் தான் என்று போற்றுகிறது புராணம். முக்கியமாக நாம் சப்தகன்னியரை வழிபட்டு வணங்கி வந்து, சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் கொடுத்தல், நம் சந்ததி சிறக்கும் என்றும் தாலி பாக்கியம் நிலைக்கும் என்றும் நமது குலம் தழைக்கும் என்றும் பக்தர்கள் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர்.
இந்த சப்த கன்னியர்களுக்கு இவ்வளவு சிறப்பு ஏன் என்பதை நாம் தெரிந்து கொள்வது மிக அவசியம். இந்த ஏழு தேவியரும் தீமைகளை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் நமக்கெல்லாம் அன்னையாகத் திகழும் காரணத்தினால் சப்த மாதர்கள் என்றும் வணங்குகிறோம்.
வழிபாடுகளை பொறுத்தவரையில் சிவா, விஷ்ணு, பிரம்மா என மூன்று தெய்வ வழிபாடு எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது அதேபோன்று தான் சக்தி வழிபாடும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் கருதப்படுகிறது. அந்தகாசுரன் எனும் அரக்கனிடம் இருந்து எண்ணற்ற அரக்கர்கள் உருவாகி இந்த உலகை இம்சை செய்து கொண்டிருந்தார்கள். இந்த அரக்கனை அழிப்பதற்காக ஆண் தெய்வங்களின் இணைகள் சப்த மாதர்கள் என்ற பெண் தெய்வங்களை உருவாக்கி அவர்கள் மூலமாக அரக்கனை அழித்ததாக புராணம் கூறுகிறது.
undefined
நடப்பதெல்லாம் நன்மைக்கே!! புத்தரே புகழ்ந்த பூர்ணாவின் கதை!!
குறிப்பாக அந்த அரக்கன் கண்ணில் பட்ட தேவர்களையும் முனிவர்களையும் விடாமல் துன்புறுத்தினார்கள். பார்வதி தேவியின் அன்பை பெற்ற காத்தியாயன முனிவரை கொடுமை செய்யும் போது பொங்கியெழுந்த பார்வதி தேவி தான்... அசுரர் படையை அழிக்கக் கிளம்பினாள். அசுரக் கூட்டத்தை ஒழிக்க 7 கன்னியர்களை உருவாக்கினாள். ஏனென்றால் அரக்கர்கள் தவத்தின் பயனாக ஆண் பெண் இணைவின்றி, கருப்பையில் உருவாகும் குழந்தையால் தங்களுக்கு மரணம் சம்பவிக்கக் கூடாது என்னும் வரத்தை வாங்கினார்கள்.
பிராம்மி : அம்பிகையின் முகத்தில் இருந்து முதலாவதாக வந்த தேவி. இவள் மேற்கு திசையின் அதிபதியாக இருக்கிறாள். பிரம்மனின் அம்சமானவள்.
மகேஸ்வரி : அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள். மகேஸ்வரனின் சக்தியானவள் இவள்.
வடகிழக்கு என்னும் ஈசானிய திசையை நிர்வகித்து வருகிறாள்.
சிவன் வழிபாடு இப்படிதான் இருக்க வேண்டும்!
கெளமாரி : கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகன். ஈசனும் உமையாளும் அழிக்க இயலாதவர்களை அழித்த முருகக் கடவுளின் அம்சமானவள் இவள்.
வைஷ்ணவி : அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள். இவள் விஷ்ணுவின் அம்சம்.
வராஹி : சப்தகன்னிகளில் வித்தியாசமானவள். பன்றி முகத்தைக் கொண்டவள். வராகம் என்பது பன்றியின் அம்சமானது. விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று. சிவன், ஹரி, சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவள்.
இந்திராணி: இந்திரனின் அம்சமானவள்.
சாமுண்டி தேவி : ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றி பத்ரகாளியாக வந்தவள் சாமுண்டியாக
சாந்தமானாள். சப்த கன்னிகளில் சர்வ சக்திகளைக் கொண்டிருப்பவள்.
சப்த கன்னியருக்கு, ஆலயங்களில் சந்நிதிகள் அமைந்திருப்பதும், தனிக்கோயில் அமைந்திருப்பதும் வெகு குறைவு தான். ஆனால் சோழப் பேரரசு காலத்தில் கோவில்களில் சப்த மாதர்களுக்கு சந்நிதி எழுப்பப்பட்டு வழிபடும் முறையானது தொடங்கியது. கிராமக் கோயில்களிலும் எல்லை தெய்வம் குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் சப்தமாதர்களுக்கு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அவர்களை காவல் தெய்வங்களாக வழிபட்டு வருகிறார்கள் பக்தர்கள்.
மேலும் இன்றைக்கும் கிராமங்களில் விதை நெல் வைத்து வழிபடும் முறை மிக முக்கியமான பூஜையாக அமைந்திருக்கிறது. சப்தகன்னியர் அமைந்திருக்கும் கோவிலுக்கு செல்லும் போது, சப்தமாதர்களையும் மனதார வேண்டிக் கொண்டால், தனம் தானியம் பெருக்கித் தந்தருள்வார்கள் தேவியர் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.