ஆடி மாதத்தில் திருமணம், ஹவுஸ்வார்மிங் போன்ற எந்த சுப நிகழ்ச்சிகளும் செய்யப்படுவதில்லை ஏன்..!!

By Kalai Selvi  |  First Published Jul 12, 2023, 11:02 AM IST

ஆடி மாதம் திருமணம், கிரஹபிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் எதுவும் ஆடி மாதத்தில் செய்யப்படுவதில்லை. ஏன் அதற்கான காரணம் என்ன என்று இங்கு பார்க்கலாம்.


ஆடி மாதம் தமிழர்களிடையே மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த தமிழ் மாதம் திருவிழாக் காலங்களில் அனைத்து பண்டிகைகளின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்நாளில் 
பல்வேறு விசேஷங்களும் சுப நிகழ்ச்சிகளும் விழாக்களும் கொண்டாடப்படும். எனவே தான் இந்த மாதம் பல விதங்களில் சிறப்பு வாய்ந்த மாதமாகும். மேலும் தமிழ் மாதத்தில் ஆடி மாதம் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் முழுவதும் திருவிழாக்கள், விரதங்கள், பூஜைகள், வழிபாடுகள் என இருந்தாலும், தனிப்பட்ட குடும்ப விசேஷங்கள் எதுவும் செய்யப்படுவதில்லை. அந்தவகையில், ஆடி மாதத்தில் திருமணங்கள், வீடு கிரஹபிரவேசம் போன்ற எந்த ஒரு சுப நிகழ்சிகளும்  ஏன் செய்யப்படுவதில்லை, அதற்கான  காரணம் என்ன என்று இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க: Aadi Month 2023: ஆடியில் செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை எவை??

Tap to resize

Latest Videos

ஆடி மாதத்தில் சுப நிகழ்சிகள் ஏன்  இல்லை?

  • ஆடி மாதம் திருமணமான தம்பதிகளை ஏன் பிரித்து வைக்கிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மேலும்  இவர்களை பிரித்து வைக்க கூடாது என்பதற்காக தான் ஆடி மாதத்தில் திருமணங்கள் நடத்தப்படுவதில்லை. மேலும் புதுமண தம்பதிகள் ஆடி மாதம் முழுவதும் பிரிந்து இருப்பதால் கிரகப்பிரவேசம், பூமி பூஜை போன்ற எந்த வித சுப நிகழ்ச்சிகளும் குடும்பத்தில் செய்யப்படுவதில்லை. 
  • ஆடி மாதம் ஜூலை 17ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ஆம் தேதி முடியும். ஜூலை-ஆகஸ்ட் காலகட்டத்தில் ஒரு குழந்தை கருத்தரிக்கப்பட்டால், குழந்தை ஏப்ரல்-மே மாதத்தில் பிறக்கும். இது கோடைகாலம் மற்றும் வெப்பத்தின் காரணமாக குழந்தை பெற சிறந்த நேரம் அல்ல. இதனால் தான் ஆடி மாதத்தில் புதுமணத்தம்பதிகளை பிரித்து வைக்கின்றனர். 
  • ஆடி மாதத்தில் தான் விவசாயிகள் விதை விதைப்பதற்கான சிறந்த காலம் என்பதால் விவசாயிகள் விதைக்கத் தொடங்குவார்கள். மேலும் விவசாயம் செழித்து, வளம் பெருக வேண்டி ஆடி மாதத்தில் மக்கள் தங்கள் குலதெய்வ வழிபாட்டை மேற்க்கொள்வார்கள். ஆகையால் குலதெய்வ வழிபாடு தவிர்க்கக்கூடாது என்பதற்காக தான் ஆடி மாதத்தில் வேறு எந்த விசேஷங்களும் குறிப்பாக செய்வதில்லை.
  • அது போல ஆடி மாதத்தில் தான் காற்று அதிகமாக வீசும். மேலும் இந்த மாதத்தில்  திடீரென்று மழை பெய்யக் கூடும் என்பதால் புதுமனை புகு விழா, பூமி பூஜை செய்தல், நிலம் வாங்குதல் போன்ற சுப நிகழ்ச்சிகளையும் செய்வதில்லை.
  • மேலும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இதனால் இறை வழிபாடு செய்யும் போது கவனம் சிதறாமல் மற்றும் தடை படலாம் இருக்க தான்  திருமணம், கிரஹபிரவேசம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் இம்மாதத்தில் நடத்தப்படுவதில்லை.
click me!