நெற்றியில் விபூதியோ குங்குமமோ இல்லாமல் இருக்க கூடாது..ஏன் தெரியுமா?

By Dinesh TG  |  First Published Sep 17, 2022, 3:40 PM IST

நீறில்லாத நெற்றி பாழ் என்பார்கள். ஆணோ, பெண்ணோ நெற்றியில் எதுவமின்றி வெறிச்சோடி இருந்தால் நன்றாகவா இருக்கும்? திருநீறு, குங்குமம், சந்தனம் அணிந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
 


ஆரோக்கியமும் செல்வமும் பெற இறைவனின் ஆசீர்வாதம் பெற, வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் நெற்றியில் வெவ்வேறு திலகங்கள் அதாவது திருநீறு, குங்குமம், சந்தனம் போன்ற வெவ்வேறு பொட்டுக்களை இட்டுக்கொள்ள வேண்டும்.

சூரியக் கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை, சந்தனம் அல்லது சிவப்பு சந்தனக் குறியை நெற்றியில் இட்டுக்கொள்வது நல்லது.திருநீறு, சந்தனம் குழைத்தது மற்றும் குங்குமம் போன்ற பிற பொருட்களைத் திலகமாகக் குளித்த பிறகு நெற்றியில் இட்டுக் கொள்வது ஒரு பழங்கால பாரம்பரியம் ஆகும். பெரும்பாலும் இந்தியாவின் தெற்குப் பகுதியில் இந்த வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர்.

Latest Videos

undefined

குறிப்பாக நெற்றியின் நடுவில் திலகம் வைப்பதற்கு காரணம் பல முக்கியமான நரம்புகள் சேரும் இடம் இதுதான், இங்கு ‘திலகம்’ அணிவதால் மன அழுத்தத்தை நீக்க உதவும், மனதை அமைதிப்படுத்தும் என்று கூறுகிறார்கள். எந்தக் கிழமையில் என்ன பொட்டு வைத்துக் கொள்வது என்பதை பார்ப்போம். சூரிய கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள் ஞாயிறு என்பதால், ஞாயிற்றுக் கிழமைகளில் சந்தனம் அல்லது சிவப்பு சந்தனத்தை குழைத்து நெற்றியில் திலகமாக வைத்துக் கொள்ளவேண்டும். அல்லது பூசிக்கொள்ள வேண்டும்.

திங்கள்கிழமை, சிவபெருமானை கொண்டாட வேண்டிய அற்புத நாள் என்பதால், சிவபெருமான் அளித்தருளிய புனித சாம்பலான திருநீறு நெற்றியில் வைத்துக் கொள்வது சிறந்தது. ஆண்கள் திருநீற்றை நெற்றியில் தடவுவதற்கு முன்பு சிறிது ஈரமாக்க வேண்டும். என்றாலும், பெண்கள் உலர்ந்த வடிவத்திலேயே பயன்படுத்தலாம்.

செவ்வாய்க் கிழமையன்று நாம் சந்தனத்தை சிறிது நீரில் குழைத்து அணிந்து கொள்ள வேண்டும். அதன் நடுவில் ஒரு சிறிய அளவில் குங்குமத்தை இட்டுக் கொள்ள வேண்டும். புதன்கிழமை அன்று மஞ்சள் மற்றும் குங்குமத்தை தனித்தனியாக அல்லது கலவையாக இட்டுக் கொள்ள வேண்டும். 

கணவன் மனைவிக்குள் உள்ள சிக்கல் தீர வேண்டுமா?

வியாழக்கிழமை மகா விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அற்புத நாள் என்பதால் சந்தனத்தையும், குங்குமத்தையும் திலகமாக இட்டுக் கொள்ள வேண்டும்.
மகாலட்சுமிக்கும், குபேரனுக்கும் உரிய மிக உன்னதமான நாள் வெள்ளிக்கிழமை. இதனால் பக்தர்கள் வெள்ளிக்கிழமைகளில் குங்குமத்தை அணிவதும், குபேர குங்குமத்தை (பச்சை நிறத்தில் இருக்கும் குங்குமம்) நெற்றியில் அணிந்து கொள்ள மிக உன்னதமான பலனைத் தரும்.

Siddhas : சித்தர்களின் சிறப்பம்சங்கள் பற்றி தெரியுமா??

சனிக்கிழமையன்று, அனுமனுக்கு உகந்த உன்னத நாள் என்பதால் செந்தூர திலகத்தை அணிந்து இறைவனை பிரார்த்தனை செய்வதன் மூலம் ஆரோக்கியமும், செழிப்பையும் அடையலாம். குளித்து முடித்து, எவ்வித துர்எண்ணமும் இன்று திருநீறோ, குங்குமமோ, சந்தனமோ இட்டுக் கொண்டால் முகம் அன்று முழுவதும் மங்கலகரமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

click me!