வீடுகட்ட சிறந்த மாதம் எது, எந்த மாதத்தில் கட்ட ஆரம்பிக்க கூடாது போன்றவற்றை இந்த பதிவில் காணலாம்.
நம்மில் அனைவருக்கும் சொந்த வீடு என்ற ஒரு கனவு இருக்கும். குடிசை வீடோ, ஓட்டு வீடோ,மெச்சு வீடோ வாங்க வேண்டும் அல்லது கட்ட விட வேண்டும் என்ற எண்ணம் எல்லாருக்கும் இருக்கும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீடு வாங்க அல்லது கட்ட தவிர வேண்டும் என்று நினைப்பார்கள். சொந்த வீட்டில் இருப்பவர்கள் மேற்கொண்டு மற்றொரு வீடு வாங்க திட்டமிடுவார்கள். இப்படி அனைவருக்கும் சொந்த வீடு கனவு கண்டிப்பாக இருக்கும்.
“வீட்டை கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்” என்ற பழமொழி உண்டு. அப்படியெனில் வீடு கட்டுவதும் சரி, திருமணம் செய்வதும் சரி அவ்வளவு சுலபமான ஒன்றில்லை என்பது தான்.
சொந்த வீடு கட்டுவது அல்லது வாங்குவது என்பது பலரின் ஆசையாக இருக்கிறது. ஒருவருக்கு என்ன தான் செவ்வாய் திசை நடந்து, சொந்த வீடு யோகம் இருப்பினும் சிலருக்கு வீடு கட்ட துவங்கிய வேலையை மடமடவென்று முடிக்காமல், பாதியிலேயே நின்று விடும். இதற்கு மிக முக்கியமான காரணம் அவர்கள் வீடு கட்ட ஆரம்பித்த மாதமாக இருக்க மிக வாய்ப்பு உண்டு.
வீடு கட்ட ஆரம்பிக்கும் போது ஜோதிட ஆலோசனை பெறுவது போல வாஸ்து சாஸ்திரத்தையும் பார்க்க வேண்டும். வாஸ்து சாஸ்த்திரத்தின் படி, சில குறிப்பிட்ட மாதங்களில் வீடு கட்ட ஆரம்பித்தால் பணம் விரயமாகுமே தவிர விரைவில் முடியாமல் இழுத்துக் கொண்டே செல்லும்.
அந்த வகையில், வீடுகட்ட சிறந்த மாதம் எது, எந்த மாதத்தில் கட்ட ஆரம்பிக்க கூடாது போன்றவற்றை இந்த பதிவில் காணலாம்.
சித்திரை மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் வீண் செலவு உண்டாகும்.
வைகாசி மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் செயலில் ஜெயம் ஏற்படும்.
ஆனி மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் மரண பயம் ஏற்படும்.
ஆடி மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் வீட்டில் உள்ள கால்நடைகளுக்கு நோய் உண்டாகும்.
ஆவணி மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் குடும்ப உறவில் ஒற்றுமை ஏற்பட்டு சுபிட்சம் உண்டாகும்.
புரட்டாசி மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் ஏற்படும்.
ஐப்பசி மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் உறவினரால் கலகம் உண்டாகும்.
கார்த்திகை மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் லட்சுமி தேவியின் அருளும் ஆசியும் கிடைக்கும்.
மார்கழி மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் வீடு கட்ட ஆரம்பித்தால் சுவர் எழுப்ப முடியாமல் தொடர்ந்து தடைகள் வந்த வண்ணம் இருக்கும்.
தை மாதத்தில் வீடு வீடு கட்ட ஆரம்பித்தால் கடன் சுமை அதிகரிக்கும் தவிர அக்கினி பயம் உண்டாகும்.
மாசி மாதத்தில் வீடு கட்ட ஆரம்பித்தால் சகல சௌபாக்கியம் கிடைக்கும்
பங்குனி மாதத்தில் வீடு வீடு கட்ட ஆரம்பித்தால் பொன், பொருள், பண விரயம் உண்டாகும் .
மேற்கூறப்பட்ட அனைத்தும் வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.