குரு பார்வை விழுந்தால் கோடி நன்மை என்பார்கள். அதனால் தான் எந்தவொரு ஜாதகத்திலும் குருவின் இருப்பு மிக மிக முக்கியம் என்று கூறுகிறார்கள். திரிகோணத்தில் குரு இருந்தால் பெரிய பலம் என்றும், மறைவுஸ்தானத்தில் இருந்தால் அதம பலம் என்றும், கேந்திரத்தில் இருந்தால் மத்திம பலம் என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். இதில் சார பலம் தான் மிக முக்கியமானது.
அனைவரும் திருவருள் வேண்டுமென்று பல வழிபாடுகளை செய்து வருவார்கள். ஆனால் திருவருள் பெற குருவருள் முக்கியமானது. ஏனென்றால் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பவர் குரு என்பதால் தான். புராணங்களில் கூட, 'குருவே சகலம், குருவே பரிபூரணமானவர்' என்று கூறப்பட்டுள்ளது. கோவில்களில் கூட தெய்வ சந்நிதிகளுக்குச் சென்று வணங்குவதோடு, பக்கவாட்டில் இருக்கும் அனைத்து தெய்வங்களையும் வணங்குவோம். ஆனால் குரு பகவானை மட்டும் தான் நேருக்கு நேராக நின்று வணங்கி வருவார்கள். குருவின் பார்வையில் விழுவது வாழ்விற்கு உயர்வு என்று கூறப்படுகிறது.
தேவ குருவான பிரகஸ்பதி மற்றும் சிவபெருமானிடம் இருந்து பெற்ற வரத்தால், நவக்கிரகங்களில் ஒரு கிரகமாக திகழ்வதோடு, சாந்தமும் கருணையும் கொண்ட கிரகமாகவும் திகழ்பவர் குரு பகவான். ஜோதிட சாஸ்திரத்தில் குரு பார்வை குறித்து பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக வாழ்க்கையில் திருமணம் முதற்கொண்டு முக்கிய தருணங்களுக்கு குரு பார்வையே முக்கிய காரணம். இன்னும் குழந்தை பாக்கியம் வேண்டும் என்று ஏங்குபவர்கள், வேலை கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என நினைப்பவர்கள் வியாழக்கிழமைகளில், நவக்கிரகத்தை வலம் வந்து, குரு பகவானை வணங்கி அவருக்கான மூலமந்திரத்தைப் பாராயணம் செய்யலாம்.
ஓம் ரிஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்
இந்த மந்திரம் உச்சரித்தால் குரு பலம் பெருகும் என்றும், வீட்டில் தடைபட்ட மங்கல காரியங்கள் அதாவது திருமண யோகம் தோள் சேர்வதோடு, குழந்தைப்பேறு கிடைக்கப் பெறுவீர்கள். மேலும் குரு பலம் பெருகி, வாழ்வில் பட்ட கஷ்டமெல்லாம் காணாமல் போகும் என்கிறார்கள். மேலும், குரு பகாவனிற்கே பகவானாக இருக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் தரிசித்து வணங்கி வந்தால், வாழ்வில் இன்பம் பொங்கும்.
ஆனைமுகனுக்கு அருகம்புல் தான் விசேஷம் ஏன் தெரியுமா?
ஓம் தட்சிணாமூர்த்தியே வித்மஹே
த்யா ஹஸ்தாய தீமஹி
தந்நோ தீஷப் ப்ரசோதயாத்
எனும் மந்திரத்தை உச்சரிப்பதன் மூலமாக, குருவருளும் திருவருளும் ஒருசேர கிடைப்பதோடு, அருளும் பொருளும் கிடைத்து ஆனந்தமாக வாழ முடியும்.