அதர்மம் அழிந்து நன்மை நடக்கும் தீபாவளி பண்டிகையும், அதர்மத்தை அழித்து அசுரனை முருகப்பெருமான் ஒழித்த கந்த சஷ்டி நாளும் ஐப்பசி மாதத்தில் தான் வருகிறது. மேலும் ஐப்பசி மாதத்தில் வரும் விஷேசமான நாட்களை தெரிந்து கொள்வோம்.
ஐப்பசி மாதமானது, புரட்டாசி மாதம் முடிந்ததும் வருகிறது. ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்று அழைப்பார்கள். மிகுந்த வழிபாடுகளுக்கும், சிறந்த பூஜைகளுக்கும் உரிய மாதமாக ஐப்பசி மாதம் இருப்பதால் தான் மற்ற மாதங்களை விட ஐப்பசி மாதம் இறைவன் வழிபாட்டிற்கு உகுந்த மாதமாக உள்ளது. அதர்மம் அழிந்து நன்மை நடக்கும் தீபாவளி பண்டிகையும், அதர்மத்தை அழித்து அசுரனை முருகப்பெருமான் ஒழித்த கந்த சஷ்டி நாளும் ஐப்பசி மாதத்தில் தான் வருகிறது. மேலும் ஐப்பசி மாதத்தில் வரும் விஷேசமான நாட்களை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக மழைகாலத்திற்கான ஆரம்ப மாதமாக ஐப்பசி மாதம் இருப்பதால் இதனை ஐப்பசி அடைமழையே என்றும் கூறுவார்கள். இந்த மாதத்தில் நாம் இறைவனை நினைத்து செய்யும் வழிப்பாடுகளால், நீர்நிலைகள் நிரம்பி, தனம் தானியங்கள் பெருகும்.
அக்டோபரில் வரும் ஐப்பசி விஷேசங்கள்..
அந்த வகையில் என்னென்ன நாட்களில் என்னென்ன வழிபாடுகள் சிறந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். வரும் 21-ஆம் தேதியன்று ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. அதிலும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசியை 'பாபாங்குசா' என்றும், இந்த ஏகாதசி அன்று விரதம் இருந்தால் வறுமை அங்கன்றி பசிப்பிணி நீங்கி, பாவ விமோச்சனம் பெறலாம் என்றும், தேய்பிறை ஏகாதசியை 'இந்திரா ஏகாதசி' என்றும், இந்த ஏகாதசி அன்று விரதம் இருந்தால், நாம் செய்த பாவம் மட்டுமில்லாமல் நமது முன்னோர்கள் செய்த பாவமும் நீங்கும் என்பது ஐதீகம்.
தீபாவளி 2022 : நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் எப்படி இருக்கும் தெரியுமா?
அடுத்து வரும் 23-ஆம் தேதியன்று பிரதோஷமும், மாத சிவராத்திரியும் இணைந்தே வருவதால், 'தன திரியோதசி' என்கிற சிவ வழிபாடு செய்வது சிறப்புக்கு உரியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து 24-ஆம் தேதி தீபாவளித் திருநாளும், அதனோடு நரக சதுர்த்தசியும் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை கேதார கெளரி விரதம் மேற்கொள்ளும் நாளாகவும் விரதம் மேற்கொள்வது வழக்கம். மேலும், 25-ஆம் தேதி ஐப்பசி அமாவாசை தினமாகவும், 26-ஆம் தேதி சந்திர தரிசனம் செய்ய உகந்த நாள் என்றும், இதனால் சந்திர பலம் பெருகும் என்பதும் ஐதீகம். 28-ஆம் தேதி சதுர்த்தி விரதமும் அனுஷ்டிக்கப்படுகிறது.
இதில் சிறப்பானது.. 30-ஆம் தேதி சஷ்டி விரதம் மேற்கொள்வது தான் . பக்தர்கள் கந்த சஷ்டி விழாவாக, முருகப்பெருமான் சூரசம்ஹாரம் செய்ததை கொண்டாடி வருகிறார்கள். முருகப்பெருமான் குடி கொண்டுள்ள கோயில்களில், சிறப்பு பூஜைகளும் விழாக்களும் கொண்டாடப்படும். அதிலும் இதுபோன்று ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் சஷ்டி, சூரிய சஷ்டி என்றும், இது நம் கிரக தோஷங்களைப் போக்கும் உன்னதமான நன்னாள் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஐப்பசி சோம வார விரதம் வரும் 31-ஆம் தேதியன்று மேற்கொள்ளப்படுகிறது.
நவம்பரில் வரும் ஐப்பசி விஷேசங்கள்..
வைஷ்ணவ அன்பர்களும் பெருமாள் பக்தர்களும் நவம்பர் 1-ஆம் தேதியன்று திருவோண விரதம் மேற்கொள்வார்கள். அஷ்டய நவமி 2-ஆம் தேதியும், ஏகாதசி விரதம் 4-ஆம் தேதியும், சனிப்பிரதோஷம் மற்றும் துளசி கல்யாணம் 5ஆம் தேதியும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இதில் ஏகாதசி விரத்தன்று பெருமாள் கோவிலிற்கு சென்று பெருமாள் தரிசனம் செய்தால் சிறப்பு வாய்ந்தது.
குல தெய்வ வழிபாடு எப்படி இருக்கணும்னு தெரியுமா?
இதையடுத்து நவம்பர் 6-ஆம் தேதி, சிவனடியார்கள் விஸ்வேஸ்வர விரதமும், 7-ஆம் தேதி பௌர்ணமி என்பதால் இந்த தினத்தன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகமும், 8-ஆம் தேதியன்று உமா மகேஸ்வர விரதம் மேற்கொள்வதற்கு உகந்தநாள் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக சிவபெருமானுக்கு அன்னாபிஷேகமானது சிறப்பாக நடைபெறும் என்று கூறப்படுக்கிறது. கர்ப்ப கிரகத்தில் இருக்கும் சிவபெருமானுக்கு சமைத்த சாதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் வைத்து சிறப்பாக அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் எல்லா சிவ ஆலயங்களிலும் நடைபெறும் என்றாலும், பெயர்போன தஞ்சை பெரிய கோவிலிளும், கங்கை கொண்ட சோழபுரம் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
முருகக் கடவுளுக்கு உகந்த நாளாக கார்த்திகை விரதம் நவம்பர் 9-ஆம் தேதியும், சங்கடஹர சதுர்த்தி 12-ஆம் தேதியும், அஷ்டமி 16-ஆம் தேதியும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இதை காலபைரவாஷ்டமி என்று வணங்குவது வழக்கம். அதாவது, அஷ்டமி பைரவ வழிபாடுகளில் ஐப்பசி பைரவாஷ்டமி விசேஷமானது என்று கூறுவார்கள்.