குல தெய்வ வழிபாடு எப்படி இருக்கணும்னு தெரியுமா?

By Dinesh TG  |  First Published Oct 19, 2022, 10:40 PM IST

நம்மையும் நமது குலத்தையும் கண்ணைப் போல் காத்தருளும் தெய்வங்களை தான் குலதெய்வங்கள் என்கிறோம். நம் அனைவரும் குலதெய்வத்துக்குப் படையலிட்டுப் பிரார்த்தனைகள் செய்திடுவோம். குல தெய்வங்கள் தான் நமக்கு ஏற்படும் பிரச்சினைகளை விளக்கி நலம்பெற ஆசி தந்தருளுவார்கள். அதோடு நமக்கு அனைத்து தெய்வங்களின் ஆசியும் அருளும் கிடைத்திட, குலதெய்வ வழிபாடு செய்வது அவசியமானது.
 


பெரும்பாலும் புராணத் தொடர்பு கொண்ட தெய்வங்களாக நமது குல தெய்வங்கள் அமைவதில்லை. நம்மைப் போலவே வாழ்ந்த நமது முன்னோர்களாகவும் நம் பூர்வீகத்தைக் கொண்டவர்களாகவும் இருப்பவர்களையே குல தெய்வம் என்கிறோம். இவர்களை தான் குலசாமிகளாக நாம் போற்றி வழிபட்டு வருவதை வழக்கமாகக் வைத்திருக்கிறோம். நாம் தினமும் குலதெய்வத்தை வணங்க வேண்டும். மாதத்துக்கு ஒருமுறையேனும் குலதெய்வக் கோயிலுக்கு சென்று தரிசிக்க வேண்டும். குறிப்பாக அமாவாசை, பெளர்ணமி ஆகிய நாட்களில் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது. நம்மால் முடிந்த அளவுக்கு குலதெய்வக் கோயிலுக்கு திருப்பணிகளைச் செய்ய வேண்டும். 

குலதெய்வ வழிபாடு செய்வது அவ்வளவு பெரிய கஷ்டம் இல்லை. தினந்தோறும் ‘நீ தான் என்னுடைய குடும்பத்தை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்’ என்று சொல்லி வீட்டில் இருக்கும் பெண்கள் விளக்கு ஏற்றி குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை கூறினாலே போதும். குலதெய்வம் உங்கள் வீட்டில் தங்கி குடும்பத்தை காத்தருளும். குலதெய்வத்தின் பெயரை தினந்தோறும் உச்சரிக்க வேண்டும். இப்படி குலதெய்வத்தை பெண்கள் மட்டும் தான் நினைவு கூற வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருமே தினமும் குலதெய்வ வழிபாடு செய்து விட்டு, அவரவர் வேலையை தொடங்கினால்,  நல்லபடியாக அந்த நாள் செல்லும். 

Latest Videos

undefined

சிவபெருமானின் சொந்த ஊர் எது தெரியுமா?

மேலும் குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று, வழிபாடு செய்து முடித்துவிட்டு, அங்கு இருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குடும்ப தலைவன் மற்றும் குடும்பத் தலைவியின் கையால் ஒரு கைப்பிடி மண் எடுத்து கொண்டு, இரண்டையும் ஒரு மஞ்சள் நிற துணியில் வைத்து முடிந்து கொள்ள வேண்டும். அதனை பூஜை அறையில் வைத்து விட வேண்டும். இதில் மஞ்சள் தூளை மட்டும் கலந்து கொள்ளுங்கள். அதோடு இந்த மண்ணோடு செம்புத்தகட்டில் உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை எழுதி, வைத்து மஞ்சள் துணையிலேயே முடிச்சு போட்டு, கட்டி வீட்டில் பத்திரமான ஒரு இடத்தில் வைக்க வேண்டும்.

கவலைகள் தீர்க்கும் கந்த சஷ்டி கவசம் கதை தெரியுமா?

இந்த மண் யார் கைக்கும் படாமல் உங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். இல்லையென்றால் கொஞ்சம் வீட்டிற்கு உள் பக்கத்தில் உயரமான இடத்தில் ஆணி அடித்து மாட்டி வைத்தால் கூட போதும். தினமும் இந்த முடிச்சுக்கும் விளக்கு ஏற்றும் போது ஊதுவத்தியை காண்பித்து விடுங்கள். ஆண்டிற்கு ஒருமுறை குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது புதிய மண்ணை எடுத்து வந்து விடலாம். உங்களுடைய வீட்டிற்கு உள்ளேயே ஏதாவது ஒரு மண் பாங்கான இடத்தில்  அந்த பழைய மண்ணை கொட்டி விட வேண்டும். உங்கள் வீட்டில் அந்த ஒரு கைப்பிடி மண் இருப்பது அந்த குலதெய்வமே வாசம் செய்வதாக அர்த்தம்.

எந்த தெய்வத்தையும் வழிபடுவதற்கு முன்பாக முதலில் பிள்ளையாரை வழிபட்டு விட்டுத்தான் அடுத்தடுத்து தெய்வங்களை வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளோம். அதுபோன்று தான் எந்தத் தெய்வத்தை வழிபடுவதாக இருந்தாலும் முதலில் நாம் அனைவரும் வழிபட வேண்டியது குலதெய்வத்தைத்தான் என்கிறார்கள் முன்னோர்கள்.

click me!