அதிர்ஷ்டம் தரும் அபிஜித் முகூர்த்தம்.. இழந்த செல்வத்தை மீட்க.. குழந்தை பாக்கியம் தரும் வழிபாடு

By Asianet Tamil  |  First Published Jul 31, 2024, 9:21 AM IST

அபிஜித் முகூர்த்தம் வெற்றியைத் தரும் முகூர்த்தம் ஆகும்.  திருமணமாகி குழந்தை பாக்கியம் பெறவும், இழந்ததை மீட்கவும் புதன்கிழமை வேண்டிக்கொள்ளலாம். அபிஜித் என்றால் வெற்றி என்று பொருள். அபிஜித் பெயரில் ஒரு நட்சத்திரமும், முகூர்த்தகாலமும் உள்ளது என்று எத்தனை பேருக்கு தெரியும். அற்புதமான அந்த அபிஜித் நட்சத்திரம் பற்றியும் அபிஜித் முகூர்த்தகாலம் பற்றியும் அறிந்து கொள்வோம்.


நல்லகாரியங்கள் செய்ய நல்ல நேரம் பார்க்க வேண்டும். ஆனால் சூரியன் உதயகாலம், அஸ்தமனகாலம், உச்சிகாலம் தோஷமற்ற நேரங்கள் இந்த நேரத்தில் எந்த நல்ல காரியங்களும் செய்யலாம். ஏனெனில் திதி, கிழமை, நட்சத்திர தோஷ காலங்கள் கிடையாது. புராணங்களின் படி சிவ பெருமான், திரிபுராசுரன் என்ற அசுரனை வதம் செய்தது அபிஜித் முகூர்த்தத்தில் தான் என சொல்லப்படுகிறது. அதனால் இது அனைத்து விதமான தோஷங்களையும் நீக்கக் கூடிய நேரம் என சொல்லப்படுகிறது.

அபிஜித் முகூர்த்தம்:
வேத ஜோதிடத்தில் உள்ள நட்சத்திரங்களில் 28வது நட்சத்திரமாக அபிஜித் நட்சத்திரத்தை சொல்வார்கள். அதேபோல அபிஜித் முகூர்த்தகாலமான பகல் முடிந்து உச்சிகாலம் ஆரம்பிக்கும் அந்த முகூர்த்த காலமும் நல்லதையும் வெற்றியையும் தேடித்தரும்.
நண்பகல் உச்சி நேரம் பகல் 11.45 முதல் 12.15 மணி வரையுள்ள நேரம் அபிஜித் முகூர்த்தம் எனப்படும். அபிஜித் முகூர்த்தம் வெற்றியைத் தரும் முகூர்த்தம் ஆகும்.

நல்ல வேலை கிடைக்கும்:
நண்பகல் உச்சி நேரம் பகல் 11.45 முதல் 12.15 மணி வரையுள்ள நேரம் அபிஜித் முகூர்த்தம் எனப்படும். அபிஜித் முகூர்த்தம் வெற்றியைத் தரும் முகூர்த்தம் ஆகும்.  திங்கட்கிழமை அபிஜித் முகூர்த்த காலத்தில் நல்ல வேலை கிடைக்கவும்,மேலதிகாரிகளின் தொந்தரவு தீரவும் வேண்டிக்கொள்ளலாம்.

ஆடி 18 பெருக்கு; தாலி கயிறு மாத்தும் போது 'இத' மறக்காதீங்க.. அவசியம் தெரிஞ்சிகோங்க..!
புதன்கிழமை அபிஜித் முகூர்த்தம்:
அதே போல வீடு யோகம் அமையவும் கடன் தீரவும் செவ்வாய்கிழமை அபிஜித் முகூர்த்த காலத்தில் வேண்டிக்கொள்ளலாம். குழந்தை பாக்கியம் பெறவும், இழந்ததை மீட்கவும் புதன்கிழமை வேண்டிக்கொள்ளலாம். வியாழக்கிழமை அபிஜித் முகூர்த்த காலத்தில் வேண்டினால் வெளிநாடு செல்லும் யோகமும் கல்வியில் மேன்மையும் கிடைக்கும்.

Tap to resize

Latest Videos

ஆடிப்பெருக்கு 2024 எப்போது..? வழிபடும் முறை மற்றும் தாலி கயிறு மாற்ற நல்ல நேரம் இதோ!

வெற்றி தரும் முகூர்த்தம்:
திருமணம் நடைபெறவும் விரும்பியவரை திருமணம் செய்யவும் வெள்ளிக்கிழமைகளில் அபிஜித் முகூர்த்த காலத்தில் வேண்டிக்கொள்ளலாம். சனிக்கிழமை வேண்டினால் வம்பு வழக்குகளில் இருந்து வெற்றி கிடைக்கும். ஞாயிறு அபிஜித் முகூர்த்த வழிபாடு வினைகள் அகலவும் உடல் நலம் மேம்படவும் வேண்டிக்கொள்ளலாம்.  வாழ்வில் உள்ள அனைத்து விதமான துன்பங்களும் நீங்குவதற்கும் இந்த நேரத்தில் நம்முடைய வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

click me!