ஆடி 18 பெருக்கு; தாலி கயிறு மாத்தும் போது 'இத' மறக்காதீங்க.. அவசியம் தெரிஞ்சிகோங்க..!

By Kalai Selvi  |  First Published Jul 30, 2024, 1:34 PM IST

Aadi Perukku 2024 Rules : ஆடிப்பெருக்கு அன்று பின்பற்ற வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன. அவை என்ன என்பதை குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.


ஆடிமாதம் என்றாலோ அம்மனுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. இம்மாதம் முழுவதும் பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை அம்மன் அருள்வாள். அதுவும் குறிப்பாக, ஆடி 18ம் நாள் அன்று சுமங்கலி பெண்கள் தாலி கயிறு மாற்றுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. மேலும் ஆடி பெருக்கு அன்று எது வாங்கினாலும் அது பெருகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில், இந்த 2024 ஆம் ஆண்டு ஆடி 18 ஆகஸ்ட் 3ஆம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது. இந்த சிறப்பு நாளில் பின்பற்ற வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உள்ளன. அவை என்ன என்பதை குறித்து இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

இதையும் படிங்க: ஆடி மாசம் புதுமணத் தம்பதிகளை பிரிப்பது ஏன் தெரியுமா? அறிவியல் உண்மை இதோ..

Tap to resize

Latest Videos

undefined

ஆடிப்பெருக்கு அன்று செய்ய வேண்டியவை:

  • ஆடிப்பெருக்கு அன்று முதலில் மஞ்சளில் பிள்ளையார் செய்ய வேண்டும். ஏனெனில், எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யும்போது மஞ்சளில் பிள்ளையார் செய்து அதை வழிபட்டால் செய்யும் காரியம் வெற்றி பெறும் என்பது ஐதீகம். பிறகு பிள்ளையாரை வணங்கி நெய்வேதியம் படைத்து வழிபடுங்கள்.
  • அதுபோல ஆடிப்பெருக்கு அன்று தாலி கயிறு மாற்றுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. எனவே நீங்கள் தாலி சரடு அணிந்து இருந்தால் கூட அதில் சிறிது அளவு மஞ்சள் கயிறு கட்ட வேண்டும்.
  • ஒருவேளை உங்களது தாலி சரடில் ஏற்கனவே கயிறு இருந்தால் அதை ஆடிப்பெருக்கு அன்று மாற்றிக் கொள்ளுங்கள். மேலும் நாளில் புதிய தாலி சரடு அணியலாம்.
  • தாலி கயிற்றை மாற்ற உகந்த நேரம் காலை 10:45 மணி முதல் 11:45 மணி வரை ஆகும். இந்த நேரம் தவிர மற்ற நேரங்களில் தாலி கயிறு மாற்றுவது உகந்ததல்ல என்று கருதப்படுகிறது.
  • ஆடிப்பெருக்கு அன்று தாலி கயிறு மாற்றினால் கணவனின் ஆயுள் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
  • முக்கியமாக ஆடிப்பெருக்கு அன்று சுமங்கலி பெண்கள் மஞ்சள், குங்குமம், வளையல், பூ, பொட்டு  போன்ற மங்கலப் பொருட்களை தாம்பூல தட்டில் தட்டில் வைத்து சுமார் மூன்று அல்லது ஐந்து பேருக்கு கொடுக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் குலம் விருத்தியடையும் என்பது நம்பிக்கை. 
  • ஆடிப்பெருக்கு அன்று அரிசி பருப்பு உப்பு, புளி மிளகாய் வத்தல் எண்ணெய் போன்ற பொருட்களை மூக்குட்டியே வாங்கி நிரப்பி வைத்து விடுங்கள்.  
  • குண்டு மஞ்சள் ஆடிப்பெருக்கு அன்று வாங்க வேண்டிய முக்கியமான பொருட்களில் ஒன்றாகும்.
  • ஆடிப்பெருக்கு அன்று எதை வாங்கினாலும் அது பன்மடகு பெருகும் என்பது ஐதீகம். எனவே, உங்களால் முடிந்த அளவிற்கு பொருட்களை வாங்கி குவியுங்கள். பணவசதி உள்ளவர்கள் பொன்னும் பொருளும் வாங்குவார்கள்.
  • ஒருவேளை உங்களால் பொன்னும் பொருளும் வாங்க முடியாவிட்டால் அதற்கு இணையான பலன்களைத் தரும் குண்டு மஞ்சளை வாங்க மறக்காதீர்கள்.

இதையும் படிங்க:  ஆடிப்பெருக்கு 2024 எப்போது..? வழிபடும் முறை மற்றும் தாலி கயிறு மாற்ற நல்ல நேரம் இதோ!

click me!