ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஜாதகத்தில் நடக்கும்போது கடன் வாங்கக் கூடாது. அதே போல குரு ஆறாம் வீட்டில் இருக்கும்போதும் குரு பகவான் சர்ப்ப கிரகங்களுடன் சேர்ந்து நிற்கும் போதும் கடன் வாங்கக் கூடாது. அப்படி வாங்கி இருந்தால் என்ன செய்யலாம்.
ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் கால புருஷனுக்கு ஆறாம் பாவமான கன்னியில் குரு பகவான் பயணம் செய்யும்போது கடன் வாங்க கூடாது. குரு பகவான் எந்த வீட்டில் அமர்ந்தாலும் அந்த வீட்டை வளர்த்து விடுவார். ராகு, கேது ஆகிய சர்ப்ப கிரகங்களுடன் குரு சேர்ந்து நிற்கும் போது புதிய கடன்கள் வாங்கவோ அல்லது கடனை அடைக்கவோ முயற்சி செய்ய கூடாது.
கடன் தீர்க்கும் பரிகாரம்
கடன் தொகை தங்களுக்கு திரும்ப வராமல் தவிக்கும் நபர்கள் சில பரிகாரங்களை செய்வதால் மிக விரைவிலேயே அவர்கள் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கச் செய்யும்.
ஆடி மாசம் புதுமணத் தம்பதிகளை பிரிப்பது ஏன் தெரியுமா? அறிவியல் உண்மை இதோ..
பைரவர் வழிபாடு:
ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் மாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் பைரவர் சந்நிதிக்குச் சென்று, வெள்ளைத் துணியில் 27 கருப்பு மிளகுகளை முடிந்து, ஒரு மண் அகல் விளக்கில் அந்த முடிச்சை திரியாக வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, தீபம் ஏற்றி பைரவரை வழிபட வேண்டும். தீபம் ஏற்றிய பின்னர் தீபத்தை சுற்றி குங்குமத்தை போட வேண்டும். மூன்று வாரங்களுக்கு இதை செய்ய வேண்டும். நீங்கள் கொடுத்த பணம், பிறர் உங்களை ஏமாற்றி கடனாக வாங்கிய பணம் ஆகிய அனைத்தும் மீண்டும் உங்களிடம் வந்து சேரும்.
கொடுத்த பணம் திரும்ப வரும் பரிகாரம்
கல் உப்பு, வெந்தயம், கருப்பு எள் மூன்றையும் நன்றாக அரைத்து தூய்மையான வெள்ளைத் துணியில் கட்டி அதனை நம்முடைய வீட்டில் கன்னி மூலையில் தென்மேற்கு மூலையில் வைத்து விட வேண்டும். இப்படி செய்தால் பணம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
காதல் ஜெயிக்குமா? அதிர்ஷ்டம் தேடி வீடு தேடி வருமா? வராஹமிகிரர் சொன்ன வலாட்டி குருவி சகுனம்!!
கடன் நிவர்த்தீஸ்வரர்
கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் செல்லும் வழியில் திருச்சேறை உடையார் கோவில் உள்ளது. இங்கு தனி சந்நதியில் சிவபெருமான் ருண விமோச்சனராய் அருள்பாளிக்கிறார். இது கடன் நிவர்த்தி செய்யும் திருத்தலம் ஆகும். இவர் கடன் நிவர்த்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.