ஆடி கிருத்திகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பக்தர்கள் முருகன் கோவில்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
தமிழக மக்கள் விநாயகர், சிவன், பார்வதி உள்பட பல கடவுள்களை வணங்கினாலும் தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு என பக்தர்கள் தங்கள் இதயங்களில் தனி இடத்தை ஒதுக்கி வைத்துள்ளனர். அப்படிப்பட்ட முருக பெருமானுக்கு வருடத்தில் 3 நாட்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றது. ஒவ்வொரு மாதமும் கிருத்திகை வந்தாலும் தை கிருத்திகை, கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகை மற்றும் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது.
திருத்தணி முருகன் ஆலயத்தில் ஆடிக்கிருத்திகை; காவடி எடுத்து வணங்கினால் நோய், சத்ரு பயம் நீங்கும்!!
undefined
ஆடி கிருத்திகை தினத்தில் முருகனை வழிபட்டால் திருமணம், பதவி உயர்வு, குழந்தை வரம் உட்பட கேட்ட வரங்கள் அத்தனையும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. உலகம் முழுவதும் நாளை ஆடி கிருத்திகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக முருகனின் ஆறு படை வீடுகள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களின் வருகைக்காக பல சிறப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆடி மாசம் புதுமணத் தம்பதிகளை பிரிப்பது ஏன் தெரியுமா? அறிவியல் உண்மை இதோ..
சிறப்பு வழிபாட்டுக்காக பக்தர்கள் அலகு குத்தியும், பால் குடம் ஏந்தியும் கோவில்களுக்கு பாதயாத்திரையாக படை எடுத்து வருகின்றனர். ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணியில் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. நாளை பகல் 2.41 மணிக்கு கார்த்திகை தொடங்கி அடுத்த நாள் (30ம் தேதி) பகல் 1.40 மணி வரை இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.