
பொதுவாக தமிழகத்தில் நவக்கிரகங்களுக்கு என்று தனித்தனி கோயில்கள் இருப்பது சிறப்பு. அதிலேயும், ஜாதகத்தில் மிக முக்கிய கிரகங்களாக சொல்லப்படும் குரு, சனி, ராகு மற்றும் கேது கிரகங்களுக்கு என்று தனியாக பரிகார ஸ்தலம் இருப்பது கூடுதல் இருப்பது. நவக்கிரகங்களுக்கு என்று தனி சன்னதி இருப்பதும் கூடுதல் சிறப்பு தான். அப்படிப்பட்ட ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்ய எல்லா நன்மையும் உண்டாகும். மேலும், கிரக தோஷத்தால் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். அதற்கு சிறந்த உதாரணமாக இருப்பது குரு பகவானுக்குரிய ஸ்தலமான போரூர் ஸ்ரீ இராமநாதீஸ்வரர் கோயில்.
ராமர் வழிபட்ட வட இராமேஸ்வரம்! சென்னையில் குரு பகவானின் அருளை அள்ளித்தரும் அற்புத தலம்!
இந்த கோயிலில் மூலவர் பெரிய வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அதே போன்று சாந்த சொரூபியாகவும், குருவாகவும் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த தலத்தில் வழிபாடு செய்ய குருவினால் ஏற்பட்ட பாதிப்பு நீங்கி குருவின் முழுமையான அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ராமபிரான் சீதா தேவியை தேடி வந்த போது போரூரில் நெல்லி மரத்தடியில் அமர்ந்தார். தனது ஞான திருஸ்டியால் பூமிக்கடியில் லிங்கம் இருப்பதையும், அதன் தலைப்பகுதியில் தன் கால்பட்டு தோசம் பெற்றதையும் உணர்ந்தார். அந்தத் தோஷத்திலிருந்து விடுபடக் கடுமையான விரதம் அதாவது, ஒரு நாளைக்கு ஒரு நெல்லிக்கனி மட்டுமே அருந்தி விரதத்தை மேற்கொண்டார். அதனால் மகிழ்ந்த சிவன் பூமியை பிளந்து கொண்டு வெளி வந்தார்.
ராமர் அச்சிவனை கட்டித்தழுவி அமிர்தலிங்கமாக மாற்றினார். அதோடு தனக்கு அருள் பாலித்த அந்த ஈசனுக்கு ராமநாத ஈசுவரர் எனவும் பெயரிட்டார். தாய் பார்வதி தேவியும் இவருக்கு காட்சி தந்து அருளினார். அந்த தாயின் பெயர் ஸ்ரீ சிவகாமசுந்தரி. ஸ்ரீ ராமரும், சிவனாரை தனது குருவாக வரித்து வணங்கி, ராவணன் தனது பத்தினி சீதையை தூக்கிச் சென்றது எந்த திசையை நோக்கி சென்றால் ஸ்ரீலங்காவை அடைய முடியும் எனவும் வேண்டினார். பிறகு, ராமரின் வேண்டுகோளுக்கு இணங்க சிவனார் திசையை காட்டி அருளிய பின் ஸ்ரீலங்காவை நோக்கி பயணம் மேற்கொண்டார், ஸ்ரீ ராமர். பின்னர் சிவனிடம் சீதை இருக்கும் இடத்தை கேட்டு அறிந்து இங்கிருந்து போருக்குப் புறப்பட்டதால் இவ்வூருக்கு 'போரூர் 'எனப் பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
ஸ்ரீ இராமநாதீஸ்வரரை வழிபட கிடைக்கும் பலன்கள்:
ஒவ்வொரு வாரமும் சிவனுக்கு உகந்த வில்வம் மற்றும் குரு பகவானுக்கு உகந்த மஞ்சள் நிற மலர்கள் கொண்டு வணங்கி வர குருவின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். அதோடு குரு பாதிப்பால் ஏற்பட்ட தோஷமும் நீங்கும். தனுசு மற்றும் மீன ராசிக்கு அதிபதியே குரு என்பதால் இந்த 2 ராசியினரும் தவறாமல் இத்தல இறைவனை வழிபாடு செய்து வரலாம்.
பௌர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி மற்றும் குருப்பெயர்ச்சி காலத்தில் இந்த கோவிலில் விசேஷமான சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகிறது. ராமேஸ்வரத்தை போல் இங்கு திருநீர் பச்சைக் கற்பூரம் கலந்ததாக கொடுக்கப்படுகிறது. ஜாதகத்தில் குரு பலம் இல்லாதவர்கள், திருமணத் தடை உள்ளவர்கள் மற்றும் புத்திர பாக்கியம் வேண்டுவோர் இத்தலத்தில் வந்து வேண்டிக் கொண்டால் எல்லா நன்மையும் உண்டாகும்.
வன போஜனம் என்றால் என்ன? கோயில்களில் ஏன் காடுகளுக்குச் சென்று உணவருந்தும் உற்சவம் நடக்கிறது?