
நமது ஜாதகத்தில் குரு ஒரு சிறப்பு இடத்தை பிடித்திருக்கிறார் ஒரு சிறப்பாக இருந்தாலே நம் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று கூறப்படுகிறது அந்த குரு சரியாக இல்லாமல் பிரச்சனை ஏற்பட்டிருந்தால் குருவிற்கு என்று சிறப்பாக அமைந்திருக்கும் கோயில் தான் சென்னையில் போரூரில் உள்ள ராமநாதீஸ்வரர் கோயில் இங்கு குருவிற்கு என்று குரு மிகச் சிறப்பு இடத்தை பிடித்துள்ளார் இதன் சிறப்புகளைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமநாதீஸ்வரர் கோயில் தான் குரு ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோயிலில் சமீபத்தில் தான் புதிதாக இராஜகோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் கடந்த தை அமாவாசை நாளன்று கோயிலில் மண்டல பூஜையும் நடைபெற்றுள்ளது.
கோயில் உருவான வரலாறு:
சீதையை தேடிவந்த ராமர் போரூரில் நெல்லி மரத்தடியில் அமர்ந்தார். ஞான திருஸ்டியால் பூமிக்கடியில் லிங்கம் இருப்பதையும், அதன் தலைப்பகுதியில் தன் கால்பட்டு தோசம் பெற்றார் ராமர். ஒரு மண்டலம் தவம் செய்தார். அந்தத் தோஷத்திலிருந்து விடுபடக் கடுமையான விரதம் அதாவது, ஒரு நாளைக்கு ஒரு நெல்லிக்கனி மட்டுமே அருந்தி விரதத்தை மேற்கொண்டார். அதனால் மகிழ்ந்த சிவன் பூமியை பிளந்து கொண்டு வெளிவந்தார். ராமர் அச்சிவனை கட்டித்தழுவி அமிர்தலிங்கமாக மாற்றினார்.ராமநாத ஈசுவரர் எனவும் பெயரிட்டார்.தாய் பார்வதி தேவியும் இவருக்கு காட்சி தந்து அருளினார். அந்த தாயின் பெயர் ஸ்ரீ சிவகாமசுந்தரி ஆகும்.
ஸ்ரீ ராமரும், சிவனாரை தனது குருவாக வரித்து வணங்கி, ராவணன் தனது பத்தினி சீதையை தூக்கிச் சென்றது எந்த திசையாக சென்றால் ஸ்ரீலங்காவை அடைய முடியும் எனவும் வேண்டினார். பிறகு, ராமரின் வேண்டுகோளுக்கு இணங்க சிவனார் திசையை காட்டி அருளிய பின் ஸ்ரீலங்காவை நோக்கி பயணம் மேற்கொண்டார், ஸ்ரீ ராமர். பின்னர் சிவனிடம் சீதை இருக்கும் இடத்தை கேட்டு அறிந்து இங்கிருந்து போருக்குப் புறப்பட்டதால் இவ்வூருக்கு 'போரூர் 'எனப் பெயர் வந்தது. ராமருக்கு குருவாக விளங்கியதால் இங்குள்ள சிவன், குரு அம்சமாக விளங்குவது பரிகார பூஜை அனைத்தும் சிவனுக்கே நடைபெறுகிறது. தலவிருட்சம் 'நெல்லி மரம்' விசேசமான ஒன்றாகும்.இக் கோவிலின் சிறப்பு.
பலன்கள்:
வியாழன்தோறும் விரதம் இருந்து, குருவை வணங்கி, வழிபாடுகள் நடத்தினால் குருவின் திருவருளைப் பெறலாம்.பௌர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி மற்றும் குருப்பெயர்ச்சி காலத்தில் இந்த கோவிலில் விசேஷமான சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகிறது. ராமேஸ்வரத்தை போல் இங்கு திருநீர் பச்சைக் கற்பூரம் கலந்ததாக கொடுக்கப்படுகிறது . குரு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோயிலுக்கு சென்று மூலவர் ஸ்ரீ இராமநாதீஸ்வரரை வழிபட்டு கோயில் பிரகாரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்ய எல்லா நன்மையும் உண்டாகும் என்பது ஐதீகம். திருமணத் தடை உள்ளவர்கள் மற்றும் புத்திர பாக்கியம் வேண்டுவோர் இத்தலத்தில் வந்து வேண்டிக் கொண்டால் கைமேல் பலன் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
வன போஜனம் என்றால் என்ன? கோயில்களில் ஏன் காடுகளுக்குச் சென்று உணவருந்தும் உற்சவம் நடக்கிறது?