திருவண்ணாமலை கோவிலில் இன்று முதல் விஐபி, விவிஐபி அமர்வு தரிசனம் ரத்து.. கோவில் நிர்வாகம் அதிரடி.!

By vinoth kumar  |  First Published Jan 5, 2024, 11:32 AM IST

பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இக்கோவிலில் தினமும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று முதல் விஐபி, விவிஐபி அமர்வு தரிசனம் செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இக்கோவிலில் தினமும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் மேல்மருவத்தூர் சீசன் தொடங்கியுள்ளதால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

Latest Videos

இதையும் படிங்க;- தி.மலை கோவிலில் யூனிபார்மில் இருந்த பெண் இன்ஸ்பெக்டர் கன்னத்தில் பளார்!திமுக நிர்வாகி உட்பட 3 பேர் மீது வழக்கு

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த அண்ணாமலையார் கோவிலில் விஐபி. விவிஐபி அமர்வு தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரிப்பதன் காரணமாக கோவில் நிர்வாகம் அதிரடி முடிவை எடுத்துள்ளது. 

இதையும் படிங்க;-  தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரபரப்பு.. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட பக்தர்கள்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் விஐபி, விவிஐபி சிறப்பு அமர்வு தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுவதாக தெரிவித்துள்ளது. பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் வருவதாலும், பக்தர்களின் நலன் கருதியும், விரைவாக தரிசனம் செய்யும் வகையில் கோயில் நிர்வாகம் சார்பில் அமர்வு தரிசனம் இன்று முதல் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

click me!