ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இன்று 5 மணிநேரம் நடை அடைப்பு! தீர்த்த கிணறுகளில் நீராட தடை! என்ன காரணம்?

By vinoth kumar  |  First Published Jan 4, 2024, 10:02 AM IST

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியன்று அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று சுவாமியும் அம்மனும் நேரடியாக பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம்.


ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று காலை 7 முதல் 12 மணி வரை நடை அடைக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியன்று அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று சுவாமியும் அம்மனும் நேரடியாக பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். இன்றைய நாளில் அன்னதானம் செய்தால் புண்ணியம் பெருகும் என்பது ஜதீகம். பொருளாதார நிலையும் உயரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஏராளமானோர் அஷ்டமி சப்பரத்தில் எழுந்தருளிய இறைவனை வழிபடுகின்றனர். இந்நிலையில், ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணத்தை முன்னிட்டு இன்று காலை 7 முதல் 12 மணி வரை நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- குழந்தை பாக்கியம் கிடைக்க 'இந்த' ஜோதிட தீர்வை பின்பற்றவும்..!

இதுகுறித்து ராமநாதசுவாமி  கோயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்: ராமநாதசுவாமி கோயிலில் மார்கழி மாத அஷ்டமி பூப்பிரதஷிணம் படியளத்தல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதனால், அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு ஸ்படிக லிங்க பூஜை நடைபெறும். பின்னர் சுவாமி, அம்பாள் ஆகியோருக்கு கால பூஜைகள் நடத்தப்பட்டு காலை 7 மணியளவில் அஷ்டமி சப்பரத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். 
 

இதையும் படிங்க;- இந்த 5 ராசி பெண்களுக்கு 2024ல் அபரிதமான அதிர்ஷ்டம் கிடைக்கும்..! யாருகெல்லாம் தெரியுமா.?

தொடர்ந்து, பர்வதவர்த்தினி அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன் ராமநாதசுவாமி எழுந்தருளி நகரில் வலம் வந்து ஜீவராசிகளுக்கு படியளப்பார். கோயிலுக்குத் திரும்பிய பிறகு சுவாமிக்கும், அம்பாளுக்கும் உச்சி கால பூஜை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியையொட்டி, காலை 7 மணி முதல் முற்பகல் 12 மணி வரை கோயில் நடை சாத்தப்படும். இந்த நேரத்தில் கோயிலுக்குள்ள உள்ள 22 தீர்த்தக் கிணறுகளில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

click me!