வாஸ்து சாஸ்திர முறைப்படி, வீட்டின் எந்தெந்த திசையில் எந்த அறை, எந்த பொருட்களை எங்கு வைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?. அவ்வாறு வைத்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்...
'ஜாதகம்' இந்து மதத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இது அவர்களது வாழ்க்கையை கணிக்க உதவுகின்றது. அதேபோல தான், அவர்களுக்கு வீடு, வாசல், வீட்டில் உள்ள அறை, அந்த அறையில் பயன்படுத்தும் பொருட்கள் எந்த இடத்தில் எங்கு இருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியம்.
ஏனெனில் ஒவ்வொரு திசைக்கும் நவகிரகங்களில் தாக்கம் இருக்கும். மேலும் எந்த தேவரின் ஆட்சி அந்த அறையில் இருக்கும் என்பதை அறிந்து அதற்கேற்றவாறு வீட்டில் பொருட்களையும், அறைகளையும் அமைக்க வேண்டும்.
வாஸ்து சாஸ்திரப்படி வடக்கு பார்த்த வீட்டில், எந்தெந்த திசையில் எந்த அறை இருக்க வேண்டும் என்பதை காணலாம்.
வீட்டின் வட கிழக்கு பகுதியில் இருக்க வேண்டியது :
பூஜை அறை. இது வீட்டிற்கு மிகவும் உகந்தது.
பின்பற்ற வேண்டியவை:
வீட்டில் ஸ்டோர் ரூம் அமைக்க கூடாது. மேலும் ஜெனரேட்டர் அறை, சமையல் அறை, குளியல் அறை, கழிப்பறை, மாடிப் படிக்கட்டுகள், ஊழியர்களுக்கான அறை உள்ளிட்டவை அமைக்க சாதகமான இடம் தேவையில்லை.
இதையும் படிங்க: வாழவே விடாத ஏழு ஜென்ம பாவம் கூட விலக.. வெறும் 1 கைப்பிடி அரிசி வைத்து எளிய பரிகாரம்!
10 முக்கிய வாஸ்து குறிப்புகள்:
வீட்டின் கிழக்கு பகுதியில் இருக்க வேண்டியது:
பிரதான அறை (ஹால்), வராண்டா, பால்கனி, ஆகியவை இருக்கலாம்.
வீட்டின் தென் கிழக்கு பகுதியில் இருக்க வேண்டியது:
குளியலறை, கழிப்பறை, மாடி படிக்கட்டுகள் இருக்க வேண்டும்.
வீட்டின் தெற்கு திசை பகுதியில் இருக்க வேண்டியது:
தண்ணீர் தொட்டி, மாடிப்படி கட்டுகள்
வீட்டின் தென் மேற்கு திசை பகுதியில் இருக்க வேண்டியது:
படுக்கை அறை, உடை மாற்றும் அறை,
அலமாரி, மாடிப்படிகட்டுகள், பாத்ரூம் ஆகியவை இருக்க வேண்டும்.
வீட்டின் மேற்கு பகுதியில் இருக்க வேண்டியது:
குழந்தைகளுக்கான படுக்கையறை,
உணவருந்தும் அறை, படிக்கும் அறை
வடமேற்கு என்ன பகுதியில் இருக்க வேண்டியது:
சமையல் அறை,
விருந்தினர்களுக்கான படுக்கை அறை, மேலும் வீட்டின் நடுவில் ஹால் அமைப்பது மிகவும் நல்லது.