நம்முடைய முன்ஜென்ம பாவங்கள், இந்த வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் அலைவதற்கு காரணமாகிவிடும். வாழவே விடாமல் அலைகழிக்கும் ஏழு ஜென்ம பாவங்களை போக்க எளிய பரிகாரம்...
ஒருவருடைய பிறப்பு அவரின் முன்ஜென்மத்தின் கர்ம வினையால் தான் நிகழ்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில் அறிந்தோ, அறியாமலோ சில பாவங்களை செய்து விடுகிறார்கள். ஆனால் அதில் சில பாவங்கள் நம்முடைய ஏழேழு ஜென்மத்திற்கும் தொடரும் என்பது ஐதீகம். இந்த ஏழு ஜென்ம பாவத்தை விலக்கிவிட இந்து சாஸ்திரங்கள் நமக்கு எளிய பரிகாரத்தை கொடுத்துள்ளது. இந்த பரிகாரத்தை பச்சரிசியை வைத்தே செய்யலாம்.
இந்த பரிகாரத்தை சனிக்கிழமை மட்டும் தான் செய்ய வேண்டும். சனிக்கிழமை அன்று காலை சீக்கிரம் எழுந்து நீராடி விட்டு பரிகாரம் செய்ய தயாராக வேண்டும். ஒரு கைப்பிடி பச்சரிசியை எடுத்து அதனை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடித்த அரிசியை கையில் வைத்தபடி சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். பின்னர் விநாயகர் கோயிலுக்கு செல்ல வேண்டும். நீங்கள் செல்லும் விநாயகர் கோயில் மரத்தடியிலும் இருக்கலாம், கோயிலிலும் இருக்கலாம். மூன்று தடவை வலம் வாருங்கள். இப்படி வலம் வரும்போது கையில் இருக்கும் அரிசி பொடியை கொஞ்சம் கொஞ்சமாக விநாயகரை சுற்றி தூவ வேண்டும்.
நீங்கள் தூவும் அரிசியை எறும்புகள் எடுத்துச் செல்லும். எவ்வளவு எறும்புகள் இந்த அரிசியை எடுத்துச் செல்கின்றனவோ? அவ்வளவு உங்களுடைய பாவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்பது நம்பிக்கை. இந்த அரிசியை எறும்புகள் மழைக்காலத்தில் தான் சாப்பிடும். எறும்புகள் எடுத்துச் செல்லும் அரிசி 2 1/4 வருடம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இதற்கு எறும்புகளுடைய எச்சில் ஒரு காரணம். மற்றொரு விஷயம் என்னவென்றால், இரண்டரை வருடங்களுக்கு ஒரு தடவை கிரக நிலைகள் மாற்றம் காணும். அப்போது பொடித்த அந்த அரிசியும் அசல் தன்மையை இழக்கும். ஆகவே தான் எறும்புக்கு பச்சரிசி தானம் செய்ய சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.
இதையும் படிங்க: உங்க சம்பளத்தின் மீது கண் திருஷ்டி விழுதா? இந்த 1 காரியம் பண்ணுங்க! இனிமேல் கையில் காசு நிற்கும்!!
இந்த காரணத்தினால் தான் வீட்டு முற்றத்தில் பச்சரிசி மாவில் பெண்கள் கோலமிடுவார்கள் நம் கையால் கோலமிடும் பச்சரிசி மாவை எறும்புகள் சாப்பிட்டால் நம் பாவங்கள் படிப்படியாக குறைந்து விடும் என சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. பச்சரிசி தானம் நம்முடைய பாவங்களை மட்டும் குறைப்பதில்லை. ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனி ஆகிய சனி தொடர்பான தோஷ பிரச்சனைகளில் இருந்தும் நம்மை விடுவிக்கும் என்பது ஐதீகம். ஒரே ஒரு கைப்பிடி பச்சரிசி ஏழு ஜென்ம பாவங்களை போக்கி நம்மை நன்றாக வாழ வைக்கும் எனில், அடிக்கடி நாம் தானம் செய்யும்போது நம்முடைய கர்ம வினைகள் எல்லாம் இந்த ஜென்மமே தொலைந்து விடும்.
வாழும் காலத்திலே பாவங்கள் செய்வதை குறைக்க வேண்டும். குறைந்தபட்ச அறத்துடன் வாழ வேண்டும். யாருடைய உழைப்பையும் சுரண்டாமல், அடுத்தவருக்கு கிடைக்கும் பிடி சோற்றை பிடுங்காமல், யாரையும் துன்புறுத்தாமல் வாழ்வது மட்டுமே நம்மை நலமாக வைத்திருக்கும்.
இதையும் படிங்க: வீட்டிற்கு இந்த உயிரினங்கள் வருகிறதா? அப்போ நிச்சயம் செய்வினை இருக்கு!! கவனமாக இருங்க!!