சூரிய பெயர்ச்சி 2024 : இந்த 5 ராசிக்காரர்களின் தொழில் பிரகாசிக்கும்.. பண வரவு அதிகரிக்கும்!

Published : May 04, 2024, 01:21 PM ISTUpdated : May 04, 2024, 01:29 PM IST
சூரிய பெயர்ச்சி 2024 : இந்த 5 ராசிக்காரர்களின் தொழில் பிரகாசிக்கும்.. பண வரவு அதிகரிக்கும்!

சுருக்கம்

ஒன்பது கிரகங்களின் அரசனான சூரியன் 14 மே 2024 அன்று ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். சூரியனின் இந்த பெயர்ச்சியால் சிம்மம், மேஷம் உள்ளிட்ட 5 ராசிகளுக்கு மிகவும் சுப பலன்கள் கிடைக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்..

'சூரியன்' கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. ஜோதிடத்தின் படி, ஒருவரின் ஜாதகத்தில் சூரியனின் நிலை வலுவாக இருந்தால், அந்த  நபருக்கு அதிர்ஷ்டம் ஒவ்வொரு அடியிலும் அவரை ஆதரிக்கும். இந்நிலையில், தற்போது மேஷ ராசியில் இருக்கும் சூரிய பகவான் மே 14, 2024 அன்று ரிஷப ராசிக்கு மாறுகிறார். சூரியனின் இந்த பெயர்ச்சி மாலை 5.54 மணிக்கு நடைபெறும். சூரியனின் இந்த சஞ்சாரத்தால் மேஷம், சிம்மம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிப்பதால் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் சூரியனைப் போல் பிரகாசிக்கும் என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..

மேஷம்: வைகாசி மாதத்தில், மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். இவர்கள்  படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இவர்களின் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்படும். மேலும், சில காலம் கடனில் இருந்தவர்களுக்கு அதிலிருந்து விடுதலை கிடைக்கும். எங்கிருந்தோ திடீரென்று பணம் வரும். உங்கள் இலக்கை அடைய நீங்கள் செய்யும் கடின உழைப்புக்கு வெற்றி உறுதி. காதல் திருமணம் செய்ய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.

ரிஷபம்: வைகாசி மாதத்தில், ரிஷப ராசிக்காரர்களுக்கு சூரிய சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். சுறுசுறுப்புடன் நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நீங்கள் பல நேர்மறையான முடிவுகளைப் பெறுவீர்கள். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பளம் கூடும். பணி மாறுதல் விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.

இதையும் படிங்க: துலாம் ராசியில் சூரியன் : இந்த 3 ராசிகாரர்கள் ஜாக்கிரதையாக இருக்கவும்..!!

கடகம்: வைகாசி மாதத்தில், கடக ராசிக்காரர்களுக்கு சூரிய சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். நிதி ரீதியாக வலுவாக இருக்கும் மற்றும் உங்கள் வேலையின் மூலம் நிதிப் பலன்களை பெறுவீர்கள். வியாபாரத்தில் இணைந்திருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். நீங்கள் முதலீடு செய்திருந்தால், அதன் மூலம் நீங்களும் பயனடைவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு விரும்பிய சம்பளத்துடன் வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்பக் கிடைக்கும்.

சிம்மம்: இந்த ராசியின் அதிபதி சூரிய பகவான் என்பதால், வைகாசி மாதத்தில், சூரிய சஞ்சாரம் இவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். உங்களுக்கு தொழிலில் பலமும் உறுதியும் கிடைக்கும். வேலையில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிப்பால், நீங்கள் பல சவால்களை சுலபமாக எதிர்கொள்ள முடியும். உங்கள் மரியாதை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உதவி கிடைக்கும்.

இதையும் படிங்க:  1 வருடங்களுக்கு பிறகு கன்னி ராசிக்குள் சூரியன்; இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..!!

கும்பம்: வைகாசி மாதத்தில், கும்பம் ராசிக்காரர்களுக்கு சூரிய சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். புதிய தொழில் மற்றும் வேலை தொடங்க நல்ல நேரம் இது. உங்கள் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும், இதனால், உங்களது நிதி செழிப்பாக இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். உங்களுக்கு மரியாதை கிடைக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Spiritual: நொடியில் ஓடி மறையும் கடன் தொல்லை.! கோடீஸ்வர யோகத்தை தரும் பரிகாரங்கள்.!
Spiritual: மருதாணி செடியை பூஜித்தால் இவ்ளோ நன்மைகளா?! வழிபாடு செய்ய ஏற்ற நாள் இதுதான்!