ஒன்றாக வருகிறது பௌர்ணமியும் கிரகணமும்… இந்தாண்டு அன்னாபிஷேகம் எப்போது? முழு விவரம் உள்ளே!!

By Narendran S  |  First Published Nov 6, 2022, 6:32 PM IST

2022க்கான ஐப்பசி பௌர்ணமியும் கிரகணமும் ஒன்றாக வருவதால் அன்னாபிஷேகம் செய்வது எப்போது என்பது பக்தர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் அதுக்குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. 


2022க்கான ஐப்பசி பௌர்ணமியும் கிரகணமும் ஒன்றாக வருவதால் அன்னாபிஷேகம் செய்வது எப்போது என்பது பக்தர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் அதுக்குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது வழக்கம். அன்றைய நாளில் ஒவ்வொரு பிடியில் சிவனை காணலாம் என்று முன்னோர்கள் கூறுவர். அத்தகைய இறைவனுக்கு சம்மான உணவை வீணாக்கக்கூடாது என்பதை உணர்த்தும் வகையில் அன்னம் இறைவனுக்கு அபிசேகம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளை (07.11.2022) மாலை 4.53 மணிக்கு தொடங்கி மறுநாள் (08.11.2022) மாலை 4.59 மணி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அபிஷேகங்களில் அன்னாபிஷேகம் என்றால் என்ன? யாருக்கு செய்யப்படுகிறது? எப்போது செய்யப்படுகிறது?

Latest Videos

மேலும் இந்த நேரத்தில் தான் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு சந்திர கிரகணம் 08.11.2022 ஆம் தேதி மதியம் 2.58 மணிக்கு தொடங்கி மாலை 6.18 மணி நிறைவு பெறுகிறது. 5.32 மணி  இதன் உச்சநேரமாக சொல்லப்படுகிறது. கிரகணத்தின் போது உணவு உட்கொள்ளக்கூடாது என்பதால் 12 மணிக்குள் உணவு உட்கொள்வதை முடித்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு 7 மணிக்கு மேல் தான் உணவு உட்கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் எதுவும் சாப்பிடக்கூடாது. இப்படி பௌர்ணமி நாளான 8 ஆம் தேதியே கிரகணமும் வருவதால் இத்தாண்டுக்கான ஐப்பசி மாத அன்னாபிஷேகம் முதல் நாளே அதாவது 7 ஆம் தேதியான நாளையே கோயில்களில் கொண்டாடப்படுகிறது.

இதையும் படிங்க: Nov 6th - இன்றைய ராசிபலன் : ரிஷபம் - வெற்றி, சிம்மம் - திறமைக்கு பலன்! மீனம் - தடங்கள்! மற்ற ராசிகளுக்கு உள்ளே

ஆகவே இதற்காக அனைத்து கோயில்களிலும் காலையே சாதம் வடிக்கப்பட்டு மதியம் அவை சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படும். ஆகவே பக்தர்கள் மதியம் முதலே அன்னாபிஷெகத்தை காணலாம். பக்தர்கள் யாரேனும் கோயிலுக்கு அரிசி வழங்க விரும்பினால் 6 ஆம் தேதியே கொடுப்பது சிறந்தது. அதுவும் பச்சரிசி கொடுப்பது சாலச்சிறந்தது. அவ்வாறு அன்னாபிஷேகத்தில் ஒரு கைப்பிடியேனும் நமது அரிசி இருந்தால் பரம்பரைக்கே அன்ன தரித்தரம் வராது. அஷ்டலஷ்மியின் அருளும் கிடைக்கும். எனவே அன்னாபிஷேகத்தில் கலந்துக்கொண்டு சிவனின் அருளை பெறுங்கள்.   

click me!