இல்லறத்துக்கும் யோனி பொருத்திற்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?

By Dinesh TG  |  First Published Nov 2, 2022, 10:09 PM IST

பொதுவாகவே திருமணம் சாதாரணமாக நடந்து முடிந்து விடுவது கிடையாது. திருமணம் என்றாலே பத்து பொருத்தமும் உள்ளதா இல்லையா என்பதை நன்கு ஆராய்ந்து பின்னர் தான் செய்து வைப்பர். பத்து பொருத்தம் இல்லையென்றாலும் ஏழு பொருத்தம் இருந்தாலும் பரவாயில்லை என்று தெரிவிப்பவர்களும் உண்டு.


பொருத்தம் பார்க்கும் பொழுது, ஒவ்வொரு பொருத்தம் குறித்தும் தனித்தனியாக யாரும் கேட்பதில்லை. இப்படி திருமணத்திற்கு பொருத்தம் பார்த்திடும் பொழுது, யோனி பொருத்தமும் பார்த்திட வேண்டும். 

இன்றைய காலகட்டத்தில் பொத்தாம் பொதுவாக நிறைய மணமக்கள் விரும்புகிறார்கள். அப்படி விரும்பும் போது ஜாதகம் எதற்கு என்று அதனை கண்டு கொள்ளாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் நமது முன்னோர்கள் என்ன செய்தாலும் அது ஏதேனும் காரண காரியங்களோடு தான் இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இதில் ஒரு சிலர் மட்டும் தான் நாம் கண்டிப்பாக பொருத்தம் பார்த்தே தீரே வேண்டும் என்று பொருத்தம் பார்க்கின்றனர். ஆனால் உண்மையில் சொல்லவேண்டும் என்றால்,  திருமணத்திற்கு பொருத்தம் பார்த்தால், யோனி பொருத்தம் பார்ப்பது தான் மிகவும் அவசியம். அதாவது திருமணத்திற்கு பின்னர் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவில் சிறந்து விளங்குவார்களா, அவர்களின் இல்லற வாழ்க்கையில் எந்தவொரு பிரச்சனையும் வராமல் இருக்குமா என்று தெரிந்து கொள்வதற்கு இந்த யோனி பொருத்தம் பார்ப்பது அவசியம். 

Latest Videos

 இங்கு மொத்தம் 27 நட்சட்திர வகைகள் உண்டு. இந்த நட்சத்திரம் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு யோனி உள்ளது. இந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் இணைந்தால் நமது மணவாழ்வு சிறப்புடன் இருக்கும். இந்த யோனி என்றால் உடல் தொடர்பான விஷயம். ஜோதிடத்தில்  இதன் காரணமாய் தான் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒவ்வொரு விலங்கு குறியீடு உள்ளது. அதனால் யோனி பொருத்தம் பார்க்கும் போது, நட்சத்திரத்துக்குரிய விலங்குகள் தான் துணையாக வரும். ஆனால் நமது நட்சத்திரத்துக்கு இன்னொரு நட்சத்திர விலங்கு பகை இல்லாமல் இருந்திட வேண்டும். இந்த பொருத்தம் ஆண் மற்றும் பெண் இவர்கள் இருவரின் ஜாதகத்தையும் ஒப்பிட்டு தான் பார்க்கப்படும்.  அதற்கு முதலில் எந்த நட்சத்திரக்கு எந்தெந்த விலங்கு என்று தெரிந்து கொள்வோம். 

அஸ்வினி - ஆண் குதிரை
பரணி - ஆண் யானை 
கார்த்திகை - பெண் ஆடு
ரோகிணி-ஆண் நாகம்
மிருக சீரிடம் - பெண் சாரை
திருவாதிரை - ஆண் நாய்
புனர் பூசம் - பெண் பூனை
பூசம்- ஆண் ஆடு
ஆயில்யம் - ஆண் யானை
மகம்- ஆண் எலி
பூரம் - பெண் எலி
உத்திரம் - பெண் எருது
அஸ்தம் - பெண் எருமை
சித்திரை - பெண் புலி
சுவாதி ஆண் எருமை
விசாகம்- ஆண் புலி
கேட்டை - ஆண் மான்
மூலம்- பெண் நாய்
பூராடம் - ஆண் குரங்கு
உத்திராடம் - கீரி, மலட்டு பசு
திருவோணம் - பெண் குரங்கு
அவிட்டம் - பெண் சிங்கம்
சதயம் - பெண் குதிரை
பூரட்டாதி - ஆண் சிங்கம்
உத்திரட்டாதி - பெண் பசு
ரேவதி - பெண் யானை

இப்போது யோனி மிருகம் உங்கள் நட்சத்திற்கு எது என்று அறிந்து கொள்ள முடியும். ஆணிற்கு ஆண் மிருகம் அல்லது பெண் மிருகம் வந்தாலும் அது பொருத்தமானது என்று எடுத்து கொள்ளலாம். அதேபோன்று ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கு உடைய மிருகத்திற்கு எதிரான பகை மிருகம் சேர்ந்து விடக் கூடாது. எடுத்துக்காட்டாக பகை மிருகங்கள் என்றால் பூனைக்கு நாயோ, பசுவிற்கு புலியோ, எலிக்கு பாம்போ, குரங்குக்கு ஆடோ இணையாய் சேர்வது நிச்சயம் பகையாகவே முடிந்து விடும். இதுபோன்ற பகை விலங்கை கொண்ட நட்சத்திரங்கள் அனைத்தும் தாம்பத்தியத்தில் இணைந்தால், ஒருவருக்கு திருப்தியும் மற்றவருக்கு ஏமாற்றமும் வரக்கூடும். அதுமட்டுமின்றி மணமுறிவு மற்றும் தவறான தொடர்புகளையும் கூட இந்த பொருந்தாத இணைப்பு உண்டாக்கும் என்பதால் திருமணத்துக்கு யோனி பொருத்தம் என்பது அவசியமானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

ஷீரடி சாய் பாபா 108 போற்றி!

இவை அனைத்தும் ஒரு முக்கியமான பிரச்சனையாக பார்க்கப்பட்டாலும், இன்றைய நாட்களில் பெருமளவு பிரிவிற்கு காரணம்  தம்பதியரிடையே காணப்படும் தாம்பத்திய பிரச்சனை தான். இதைத்தான் ஜோதிடத்தின் வாயிலாக நம் முன்னோர்கள் அந்நியோன்யமான தாம்பத்யத்துக்கு அன்றே வழிகாட்டியுள்ளனர் என்பது நிரூபணமாகியுள்ளது.

click me!