தக்காளி விலை உயரும் என ஆற்காட்டு பஞ்சாங்கம் முன்கூட்டியே கணித்துள்ளது.
இந்தியாவில் தற்போது தக்காளியின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் தக்காளி முயல் தக்காளி வியாபாரிகள் மகிழ்ச்சியில் துள்ளிக் கொடுக்கின்றன. சொல்லப்போனால் தக்காளி உயர்வால் வியாபாரிகள் ஒரே நாளில் பணக்காரர்கள் ஆன கதையும் நிகழ்கிறது. இம்மாத தொடக்கத்தில் உயர்ந்த தக்காளியின் விலை தற்போது வரை உச்சதிலேயே இருக்கிறது. இதனால் சமையலுக்கு கூட தக்காளியை குடும்பஸ்திரீகள் பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நவகிரகங்களை எந்தெந்த கிழமையில் வழிபட வேண்டும்? சூரியன், குரு பகவானை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்..!
இந்நிலையில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தக்காளியின் விலை உயரும் என ஆற்காட்டு பஞ்சாங்கம் முன்கூட்டியே கணித்துள்ளது. இதுகுறித்து ஆற்காட்டு பஞ்சாங்கம் கூறுகையில், காலபுருஷனுக்கு, நான்காம் இடமான கடகத்தில் செவ்வாய் நீசமும் மற்றும் ஐந்தாம் இடமான சிம்மத்தில் செவ்வாய் உள்ளது. நான்காம் இடம் உணவு பொருட்கள் சம்பந்தப்பட்ட இடம் ஆகும். அங்கு செவ்வாய் நீசமாகி இருப்பதால், தக்காளி போன்ற அழுகக் கூடிய உணவு பொருட்கள் அனைத்தும், விலை உயரும். எப்போது செவ்வாய் நீச ஸ்தானத்தை விட்டு 15 டிகிரி அளவுக்கு விலகி செல்கிறதோ அப்போது தக்காளியின் விலை பாதி குறையும். குறிப்பாக குருவின் பார்வை இங்கு இருப்பதால், தக்காளியின் விலை படிப்படியாக விலை குறையும்.