இன்று கோ துவாதசி, பிரதோஷம்.. இதை செய்தால் கோடி புண்ணியம் கிட்டும்.. சிவ பெருமானின் அருளையும் பெறலாம்..

By Ramya s  |  First Published Oct 26, 2023, 9:18 AM IST

இந்த நாளில் பசுக்களுக்கு பூஜை செய்து, அகத்திக்கீரையை கொடுத்தால் லட்சுமி கடாட்சம் கண்டிப்பாக கிடைக்கும் என்பது ஐதீகம்.


ஐப்பசி மாத கிருஷ்ணபட்சத்தில் வரும் துவாதசிக்கு கோவத்ஸ துவாதசி என்று பெயரி. இந்த நாளில் பசு கன்றுக்குட்டி இரண்டையுமே குளிப்பாட்டி, அவற்றுக்கு சந்தனம், குங்குமம் இட்டு பூ வைத்து அலங்கரிக்க வேண்டும். பசுவை, அதன் கன்றோடு சேர்த்து அன்புடன் கொண்டாட வேண்டிய நாள் இது. இந்த கோவத்ஸ் துவாதசி விரதம், விரதங்களில் முதன்மையானதும் மகிமை வாய்ந்ததுமாக கருதப்படுகிறது. இந்த நாளில் பசுக்களுக்கு பூஜை செய்து, அகத்திக்கீரையை கொடுத்தால் லட்சுமி கடாட்சம் கண்டிப்பாக கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த கோ பூஜையினால் தரித்திரம், துக்கம் விலகும் என்று நம்பப்படுகிறது. மேலும் வியாபாரம் விருத்தி அடையும், நிலையான லாபம் கிட்டும் என்பது நம்பிக்கை. பசுவின் உடலில் சகல தேவர்களும், ஐஸ்வரியம் இருக்கிறது என்றும் வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எல்லா சுப காரியங்களையும் செய்யலாம். மேலும் இந்த கோவத்ஸ் துவதசியில் கோ பூஜை செய்தால் வாழ்வில் அனைத்து செல்வங்களை குறைவில்லாம் பெறலாம்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

சாஸ்திரங்களில் பல தானங்கள் குறித்து சொல்லப்பட்டிருந்தாலும், பசு தானம் மிகவும் சிறப்புமிக்கது என்று சொல்லப்பட்டுள்ளது. கோ தானம் செய்பவ்ர்களுக்கு கயிலையில் சிவ கணங்களுடன் சிவனை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே கோசாலை உள்ள கோயிகளுக்கு பசு தானம் செய்தால் கோடி புண்ணியம் கிட்டும். அதுமட்டுமின்றி அவர்களின் வாரிசுகளுக்கும் புண்ணியம் கிட்டும்.

கனவில் காகம் வந்தால் கெட்டதா? இதை நீங்கள் உணர்ந்ததுண்டா?

இத்தகைய சிறப்பு மிக்க கோ துவாதசி தான் இன்று. அதுவும் இன்று பிரதோஷமும் சேர்ந்து வருவதால் கூடுதல் சிறப்பு. கோவத்ஸ துவாதசி என்பது பசுவை பூஜிக்க வேண்டிய நாளாகும். அதே போல் இன்று பிரதோஷமும் சேர்ந்து வருவதால், இன்றைய தினம் சிவனை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை இறை வழிபாடு செய்வது நல்லது. பணியில் இருப்பவர்கள் அந்த நேரத்தில் இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்து கொண்டாலும் நல்ல பலன் கிடைக்கும்.

click me!