பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். இக்கோயிலில் கார்த்திக்கை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த 10 நாட்கள் திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டு இருக்கும்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா பக்தர்கள் வெள்ளத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். இக்கோயிலில் கார்த்திக்கை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த 10 நாட்கள் திருவண்ணாமலை விழாக்கோலம் பூண்டு இருக்கும். இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இதையும் படிங்க;- கார்த்திகை திருநாள்; அண்ணாமலையார் கோவிலில் விஐபி தரிசனம் ரத்து - அமைச்சர் தகவல்
இந்நிலையில், இன்று காலை 5.45 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத, விண்ணை பிளந்த பக்தர்களின் அரோகரா முழக்கங்கள் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் சாமி சன்னதியில் உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதனைத் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவில் காலை மாலை என இரண்டு வேளையும் சாமி வீதி உலா நடைபெறும். இதைத் தொடர்ந்து வருகிற நவம்பர் 23ம் தேதி மகா தேரோட்டமும், நிறைவு நாளான 10வது நாள் நவம்பர் 26-ம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவறையின் முன்பு அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படும்.