மயிலாடுதுறை காவிரி ஆற்றின் துலா உற்சவ தீர்த்தவாரி; ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

மயிலாடுதுறையில் காவிரி ஆற்றின் துலா உற்சவ தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று நடைபெற்ற நிலையில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.


மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி அனைத்து கோயில்களிலும் ஐப்பசி மாதம் நடைபெறும் துலா உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மயிலாடுதுறை காவிரி கரையில் மயூரநாதர் ஆலயம், வதான்யேஸ்வரர் ஆலயம், ஐயாரப்பர் ஆலயம், புனுகீஸ்வரர் ஆலயம், காசி விஸ்வநாதர் ஆலயம், தெப்பக்குளம் விஸ்வநாதர் ஆலயம், படித்துறை விஸ்வநாதர் ஆலயம் ஆகியவற்றில் ஐப்பசி மாதம் கடைசி பத்து நாட்கள் கொடியேற்றத்துடன் விழா நடைபெறுவது வழக்கம். 

Latest Videos

திருத்தேர் உற்சவம், திருக்கல்யாணம், தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெறும். அதன்படி ஆலயங்களில் கடந்த ஏழாம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காவிரி தீர்த்தவாரி இன்று நடைபெற்றது. ஆற்றின் உள்ளே 16 தீர்த்த கிணறுகள் அமைந்துள்ளன. புனிதம் வாய்ந்த இடமாக கருதப்படும் காவிரி ஆற்றில் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதா, கோதாவரி உள்ளிட்ட ஏழு  புண்ணிய நதிகள் தங்கள் பாவங்களை போக்கிக் கொள்ள காவிரியில் நீராடுவதாக ஐதீகம். 

கோவையில் ஸ்விகியில் ஆர்டர் செய்த உணவில் கூல் லிப்; அதிர்ச்சியில் அலறிய பெண் வாடிக்கையாளர்

ரிஷப தேவரின் செறுக்கை இங்கே இறைவன் அடக்கியதாக புராண வரலாறு கூறுகிறது. எனவே காவிரியின் நடுவே ஆற்றின் நீரோட்டத்தில் எதிர்புறமாக மேற்கு நோக்கியவாறு நந்தி தேவருக்கு என்று தனி சன்னதி அமைந்துள்ளது. சிறப்பு வாய்ந்த புனித தீர்த்தமான மயிலாடுதுறை காவிரி ஆற்றில் இன்று தீர்த்தவாரி நடைபெறுவதை முன்னிட்டு இரு கரைகளிலும் அனைத்து ஆலயங்களில் இருந்து சுவாமி அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகள் பக்தர்களுக்கு காட்சியளித்து தீர்த்தவாரி அளித்தனர். \

வழக்கத்திற்கு மாறாக சீற்றத்துடன் காணப்படும் கடல் அலை; புதுவையில் கடலில் குளிக்க மக்களுக்கு தடை

அனைத்து ஆலயங்களின் அஸ்திர தேவருக்கும் காவிரி கரையில் பால், பன்னீர், இளநீர், சந்தனம், தயிர், தேன், நெய் உள்ளிட்ட 16 வகை திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.  திருவாவடுதுறை ஆதின குரு மகா சனிமாதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக சுவாமிகள் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். இதற்காக இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் புனித நீராட வருகை தந்துள்ளனர்.

click me!