திருவண்ணாமலை தீப திருவிழா.. இன்று முதல் 10 சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விவரம் இதோ.!

By vinoth kumar  |  First Published Nov 25, 2023, 11:01 AM IST

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,688 அடி உயரமுள்ள மலை உச்சியின் மீது மகாதீபமும் ஏற்றப்படுகிறது. 


திருவண்ணாமலை தீபத்திருவிழாவை ஓட்டி இன்று முதல் நவம்பர் 27ம் தேதி வரை 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் கார்த்திகை தீப விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,688 அடி உயரமுள்ள மலை உச்சியின் மீது மகாதீபமும் ஏற்றப்படுகிறது. தீபத்தை காண வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 40 லட்சம் பக்தர்கள் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- கார்த்திகை தீபம் 2023 : தவறுதலாக கூட இந்த முறையில் தீபம் ஏற்றாதீர்கள்.. மோசமான இழப்பு நேரிடலாம்!

இந்நிலையில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

* இன்று 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து புறப்பட்டு வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இரவு 9.50க்கு புறப்பட்டு, நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

* 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 03.45 மணிக்கு புறப்பட்டு வேலூர் கண்ட்டோன்மென்ட் வழியாக சென்னை கடற்கரை ரயில் நிலையம் சென்றடையும்.

* விழுப்புரம்- திருவண்ணாமலை முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 06129) நாளை (26ம்தேதி) மற்றும் 27ம் தேதி ஆகிய 2 நாட்கள் இயக்கப்படுகிறது. காலை 9.15க்கு புறப்படும் சிறப்பு ரயில் திருவண்ணாமலைக்கு 11 மணிக்கு வந்தடையும்.

* 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையில் இருந்து பிற்பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம் வழியாக மயிலாடுதுறை சென்றடையும். இந்த ரயில் மதியம் 12.40 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு திருவண்ணாமலை வந்தடைகிறது.

* 25 மற்றும் 26 இரவு 09.15 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் ரயில், விழுப்புரம் வழியாக தாம்பரம் சென்றடையும்.

* 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கடலூர் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 08.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில், வேலூர் கண்டோன்மென்ட் வரை தொடரும்.

* 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் காலை வேலூரில் இருந்து 01.30 மணிக்கு புறப்படும் ரயில், திருவண்ணாமலைக்கு காலை 3 மணிக்கு சென்றடையும். தொடர்ந்து அந்த ரயில் திருப்பாதிரிப்புலியூர், திருச்சி செல்லும்.

* 26ம் தேதி நள்ளிரவு 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் ரயில், திருச்சிக்கு மறுநாள் காலை 7.35 மணிக்கு சென்றடையும். 

* 26 திருச்சி ஜங்ஷனில் இருந்து அதிகாலை 04.50 மணிக்கு புறப்படும் ரயில், திருவண்ணாமலைக்கு காலை 11:40க்கு சென்றடையும். தொடர்ந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை ரயில் செல்லும்.

இதையும் படிங்க;-  திருவண்ணாமலை பரணி தீபம், மகா தீபம்.. ஆன்லைனில் அனுமதி சீட்டு பெறுவது எப்படி? எப்போது விற்பனை தொடக்கம்?

click me!