நீங்கள் கார்த்திகை தீபம் ஏற்றும் போது தவறுதலாக கூட இந்த தவறை செய்யாதீர்கள். அவை..
விளக்கு ஏற்றுவதற்கு சரியான விதி உள்ளது. இந்த விதியை அனைவரும் அறிந்திருக்க மாட்டார்கள், இதனால் அவர்கள் தீபம் ஏற்றும் போது அடிக்கடி தவறு செய்கிறார்கள் மற்றும் இந்த தவறினால், அவர்கள் தீபம் ஏற்றுவதற்கான முழு பலனைப் பெறுவதில்லை. இந்து மதத்தில் தீபம் ஏற்றுவது சிறப்பு வாய்ந்தது.
தற்போது கார்த்திகை மாதம் நடந்துகொண்டிருக்கிறது. இந்த மாதத்தில் தீபம் ஏற்றுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் கார்த்திகை தீபம் அன்று நம் வீடுகளில் பல இடங்களில் விளக்குகள் ஏற்றி அலங்கரிப்பது உண்டு. இந்நாளில் தீபம் ஏற்றி வழிப்படால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். கார்த்திகை மாதத்தில் வீட்டில் விளக்கேற்றி அலங்கரிப்பது தவறில்லை. ஆனால் சரியான முறையில் விளக்கை ஏற்றுவது மிகவும் அவசியம். நீங்கள் சரியான விதிகள் மற்றும் முறைகளில் விளக்கை ஏற்றவில்லை என்றால், பல்வேறு இழப்புகளை சந்திக்க நேரிடும். எனவே விளக்கு ஏற்றுவதற்கான சரியான விதி பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
undefined
சுத்தமான விளக்கில் தீபம் ஏற்றவும்:
தூய தீபம் என்பது முன்பு எரிந்த திரி அல்லது எண்ணெய் இல்லாமல் சுத்தமான விளக்கு. பழைய எரிந்த விளக்கை நீரில் நன்கு சுத்தம் செய்து தீபம் ஏற்ற வேண்டும். பழைய விளக்கில் தீபம் ஏற்றக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: Karthigai Deepam 2023 : கார்த்திகை தீபம் அன்று என்ன செய்ய வேண்டும்? எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும் தெரியுமா?
இந்த உலோகத்தைப் பயன்படுத்துங்கள்:
இறைவனுக்கு தீபம் காட்டுவதற்கு நீங்கள் பித்தளை, தாமிரம் மற்றும் களிமண்ணால் செய்யப்பட்ட விளக்கினை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதுவே சிறந்தது மற்றும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. எனவே, மற்ற உலோகங்களால் செய்யப்பட்ட விளக்குகளைப் பயன்படுத்த வேண்டாம்.
இதையும் படிங்க: Karthigai Deepam 2023 : கார்த்திகை மாதம் தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுவது பலன் தருமா?
பித்தளை விளக்கை வெறுமையாக எரிக்காதீர்கள்:
நீங்கள் பித்தளை விளக்கில் தீபம் ஏற்றும் போது அதில், திரி, நெய், எண்ணெய் இட்டு, ஒன்றிரண்டு மஞ்சள் அரிசி மற்றும் பூ இதழ்களைச் சேர்த்து தீபம் ஏற்றவும்.
அதுபோல், தீபம் ஏற்றுவதற்கு நெய், கடுகு எண்ணெய் மற்றும் எள் எண்ணெய் பயன்படுத்தவும்..பலரும் அறியாமலேயே அனைத்து தெய்வங்களின் முன் அனைத்து வகையான தீபங்களையும் ஏற்றுகிறார்கள். சில எண்ணெய் விளக்குகள் சில விசேஷ நாட்கள், தேதிகள் மற்றும் தெய்வங்களுக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்படுள்ளது. எனவே, அறிவு இல்லாமல் தீபம் ஏற்ற எந்த எண்ணையும் பயன்படுத்த வேண்டாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D