
Alkondamal Temple History in Tamil : திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள ஆல் கொண்ட மால் கோயில் கண்ணன் கோயில் என்று கூறப்படுகிறது கால்நடைகளுக்கு மட்டுமே வேண்டிக்கொள்ளும் ஒரு கோயிலாக இங்கு கூறப்படுகிறது.மாலகோயில் என அழைக்கப்படும் இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஜனவரி 15, 16, 17ம் தேதிகளில் திருவிழா விமரிசையாக நடைபெறும். விவசாயிகள் தங்கள் மாடுகளை கோயிலுக்கு தானமாக கொடுத்து வழிபடுகின்றனர். நேர்த்திக்கடனாக பொம்மை மாடுகளையும் வழங்குவார்கள்.
விவசாயம் தோழன்:
விவசாயம் உள்ளிட்ட பணிகளுக்கு துணையாக உள்ள கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கோயிலில் வழிபாடு செய்யப்படுகிறது. இங்கு முட்புதர்களால் சூழப்பட்ட கொடிய பாம்புகள் வாழும் ஆலமரத்தின் கீழ், லிங்க வடிவில், புற்று உருவானது. அந்த காட்டுப்பகுதியில் மேயும் மாடுகள், லிங்க வடிவில் உருவான புற்றுக்கு பாலை சொரிந்து அபிஷேகம் செய்துள்ளன. தொடர்ந்து பசுக்கள் பால் சொரிவதை கண்ட முன்னோர்கள், ஆயர்பாடி கண்ணனின் மகிமை என்று உணர்ந்தனர்.ஆலம் உண்ட சிவபெருமானை குறிக்கும் லிங்க வடிவ புற்றில், கண்ணன் குடி கொண்டதால் அங்குள்ள திருமாலை "ஆல்கொண்டமால் என்று மக்கள் வணங்க ஆரம்பித்தனர். சிவனும், திருமாலும் ஒருங்கே அமையப்பெற்ற ஆல்கொண்டமாலுக்கு விவசாயிகள் பால், வெண்ணெய் ஆகியவற்றால், அபிஷேகம் செய்து வழிபட துவங்கினர். ஆண்டு முழுவதும் உடனிருந்து உதவி செய்யும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவதையும், உண்மையான உயர்வுக்கு துணை புரியும் உயிர்களை வழிபடுவதையும், இந்த கோவில்வழிபாட்டு முறை காட்டுகிறது.
ராமர் வழிபட்ட வட இராமேஸ்வரம்! சென்னையில் குரு பகவானின் அருளை அள்ளித்தரும் அற்புத தலம்!
மாட்டுப் பொங்கல்:
பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியுள்ள ஆல்கொண்டமால் கோயிலில், மாட்டுபொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருவிழாவையொட்டி, உடுமலை பகுதி கிராம மக்கள், பாரம்பரிய நடனங்களை ஆடியும், வழிபாடுகள் நடத்தியும் வருகின்றனர்.