திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்துக்கு ஹைதராபாத் நகரைச் சேர்ந்த இருவர் வந்து ஒரு கோடி ரூபாய் நிதியை நன்கொடை அளித்துச் சென்றனர்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் திருப்பித ஏழுமலையான் கோவில் பணிகளை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
எஸ்ஆர்சி இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் சார்பில் ஏவிகே பிரசாத் மற்றும் ஏவி ஆஞ்சநேய பிரசாத் ஆகியோர் சனிக்கிழமையன்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் ஒய். வி. சுப்பா ரெட்டியைச் சந்தித்தனர். திருமலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது ஒரு கோடி ரூபாய் நன்கொடையை வரைவோலை வடிவில் அளித்தனர்.
undefined
செளராஷ்டிரா தமிழ் சங்கமம் சிறப்பு ரயிலை தொடங்கி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி
நன்கொடை நிதியை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிராணதானம் அறக்கட்டளை தொடர்பான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துமாறு தேவஸ்தான தலைவரிடம் நன்கொடையாளர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். சமூகத்தின் நலிவடைந்த பிரிவினருக்கு நன்மை செய்யும் நோக்கில், கோயில் அறக்கட்டளைக்கு நிதி வழங்கிய நன்கொடையாளர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவர் ஒய். வி. சுப்பா ரெட்டி, நன்றி தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன் பெங்களூரைச் சேர்ந்த முரளி கிருஷ்ணா என்ற திருப்பதி ஏழுமலையானின் பரம பக்தர். திருப்பதி மாவட்டம் டெக்கலி, நெல்லூர் மாவட்டம் உள்ள போத்திகுண்டா ஆகிய பகுதிகளில் தனக்குச் சொந்தமான விவசாய நிலங்களை திருப்பதி ஏழுமலையானுக்காக காணிக்கையாகச் செலுத்தினார். தான் வழங்கிய 250 ஏக்கர் நிலத்தில் தானே பயிரிட்டு தேவஸ்தானத்துக்கு வேண்டிய தானியங்கள் மற்றும் பூக்களை வழங்குவதாகவும் கூறினார்.
28 ரயில்களில் 583 பெர்த் அதிகரிப்பு! திடீர் மாற்றத்தால் முன்பதிவு செய்த பயணிகள் அவதி