சென்னை பெரம்பூரில் அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கம் (iskcon) சார்பில் ''ஸ்ரீ ஸ்ரீ கெளர நித்தாய் ரத யாத்திரை'', ஏப்ரல் 14ஆம் தேதி பக்தர்களின் ஆரவாரத்தோடு அமர்களமாக நடைபெற்றது.
இஸ்கான் என்று அழைக்கப்படும் அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கம், சர்வதேச அளவில் பரவி காணப்படுகிறது. இந்த இயக்கம் இந்தியாவில் பரவலாக அறியப்படாமல் இருந்தாலும், "ஹரே கிருஷ்ணா ஹரே ராமா" என்ற இஸ்கான் இயக்கத்தின் முழக்கத்தை அறியாமல் இருக்க முடியாது. இந்த அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (ஏப்ரல் 14) ரத யாத்திரை சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. கடந்த எட்டு வருடங்களாக இந்த யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இது 9ஆவது ஆண்டு யாத்திரையாகும்.
எல்லா கிராமங்களிலும், நகரங்களிலும் கிருஷ்ணரின் புகழையும் திருநாமத்தையும் பரப்பும் நோக்கில் இஸ்கானின், 'ஸ்ரீஸ்ரீ கௌர நிதாய் ரத யாத்திரை' நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த விழாவில் கெளரவ விருந்தினராக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ராஜாராம் கலந்து கொண்டார்.
சென்னை, பாரதி சாலையில் இருந்து புறப்பட்ட ரதம், கிருஷ்ணர் புகழ் பாடியபடியே பெரம்பூர் நெடுஞ்சாலை, பேப்பர் மில்ஸ் சாலை, ரெட் ஹில்ஸ் சாலை வழியாக லட்சுமி புரம் பத்மஸ்ரீ சேஷ மஹாலை மாலை 6.30 மணியளவில் சென்றடைந்தது.அதன் பின்னர் பக்தர்களின் செவிகளுக்கு விருந்தாக, கல்யாண மண்டபத்தில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.
ஸ்ரீல பிரபுபாத தியேட்டர்ஸ் சார்பில் அஜாமிளன் நாடகம் நவீன தொழில் நுட்பத்துடன் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மண்டபத்தில் கூடியிருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி, ரத யாத்திரை விழா சிறப்பிக்கப்பட்டது.
இதையும் படிங்க: வீட்டில் பணம் தங்கவில்லையா? நிலைவாசலில் இப்படி குங்குமப் பொட்டு வைத்தால், வற்றாத செல்வம் வீட்டில் சேரும்!
இதையும் படிங்க: உப்புடன் 4 கிராம்பு போட்டு வைத்தால்.. அதுவும் வீட்டின் இந்த இடத்தில் வைத்தால், பணம் அதிகம் குவியுமாம்!!