கடவுளே.. இந்த தமிழ் புத்தாண்டில் எல்லாரையும் நல்லபடியா வையுப்பா.. கோவில்களில் குவியும் பக்தர்கள்..!

By vinoth kumar  |  First Published Apr 14, 2023, 10:19 AM IST

தமிழ் புத்தாண்டு  இன்று கொண்டாடப்படுகிறது. இந்த தேதியில் சுபகிருது வருடம் முடிந்து சோபகிருது ஆண்டு தொடங்க இருக்கிறது. இந்த நாளில் வழிபட்டால் ஆண்டு முழுவதும் மங்களகரமாகவும், நிதி நெருக்கடி இல்லாமலும் இருக்கும் என்பது நம்பிக்கையாகும்.


தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

தமிழ் புத்தாண்டு  இன்று கொண்டாடப்படுகிறது. இந்த தேதியில் சுபகிருது வருடம் முடிந்து சோபகிருது ஆண்டு தொடங்க இருக்கிறது. இந்த நாளில் வழிபட்டால் ஆண்டு முழுவதும் மங்களகரமாகவும், நிதி நெருக்கடி இல்லாமலும் இருக்கும் என்பது நம்பிக்கையாகும். இந்நிலையில், தமிழ்ப்புத்தாண்டையொட்டி  ஏராளமான பக்தர்கள்,  அதிகாலையிலேயே குளித்து முடித்து புத்தாடை அணிந்து கோயில்களில் குவிந்துள்ளனர். அங்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் நடைபெறுவதையோட்டி, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

Latest Videos

undefined

இதையும் படிங்க;- தமிழ் புத்தாண்டு 2023 : வழிபாடு செய்ய நல்ல நேரம் எது? எப்படி வழிபட வேண்டும்!

கோவையில் புலியகுளம் விநாயகர் கோவில், கோனியம்மன் கோவில், மருதமலை, பேரூர் பட்டீசுவரர் கோவில் ஆகிய கோவில்களில் அதிகாலை முதலில் இருந்தே பக்தர்கள் அதிக அளவு வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு புலியகுளத்தில் உள்ள  விநாயகர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க;-  சித்திரை மாத ராசி பலன் 2023: சூரிய குபேர யோகத்தால் செல்வ செழிப்புடன் இருக்க போகும் 4 ராசிகள்!

உலக புகழ் பெற்ற 19 அடி உயரம் 190 டன் எடை கொண்ட ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய முந்தி விநாயகர் சிலைக்கு சித்தரை கனியை முன்னிட்டு ஆப்பிள், ஆரஞ்சு, பலாப்பழம் அன்னாசி, வாழைத்தார், மாதுளை, கொய்யா என 2 டன் அளவிற்கு பழங்களை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். 

click me!