இந்துக்கள் பாம்பை தெய்வமாக வழிபடுவது வழக்கம். இதனால் பல நூறு ஆண்டுகளாக பாம்பு புற்றில் பால் ஊற்றுவது, முட்டை வைப்பது போன்ற பழக்க வழக்கங்கள் இருந்து வருகிறது. குறிப்பாக ஆடி மாதங்களில் எல்லா அம்மன் கோவில்களிலும் பாம்பு புற்றுக்கு பால் ஊற்றுவது வழக்கம். ஆனால் பாம்பு முட்டையையும் பாலையும் குடிக்காது என்று நவீன அறிவியல் கூறுகிறது. பின் நம் முன்னோர்கள் எதற்காக பாம்பு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்? என்பதை தெரிந்து கொள்வோம்.
அம்மன் கோயில்கள் ஆடி மாதம் வந்தால் களைகட்டும் என்பது போலவே அம்மன் கோயில்களில் உள்ள பாம்பு புற்றுகளும் மஞ்சள் குங்குமத்தால் களைகட்டும். இந்துக்கள் பாம்பை கடவுளாக வணங்கி வழிபடும் காரணத்தினால் பாம்பு புற்றுக்கு பால் ஊற்றி முட்டை வைத்து வழிபடுவார்கள்.
விஷ்ணு ஆதிசேஷன் என்னும் நாகத்தின் மடியில் தான் பள்ளி கொண்டிருக்கிறார். சிவபெருமான் தன்னுடைய கழுத்தில் நாகத்தை மாலையாக்கி அணிந்திருக்கிறார். முருகப்பெருமானின் காலடியில் நாகம் படம் எடுத்தப்படி உள்ளது. நாகம் அல்லது சர்ப்ப வழிபாடு என்பது நமது முன்னோர்களின் காலத்திலிருந்தே இருந்து வருகிறது. ஆடிமாதத்தில் அம்மனுக்கு பூஜை செய்யும் போது நாகதேவி பூஜையும் சிறப்பாக செய்யப்படுகிறது.
மாதவிலக்கு நேரங்களில் பெண்கள் கோவிலுக்கு செல்ல கூடாது..காரணம் இதுதான்!
ஜாதக அமைப்பின் படி நம்மை ஆட்டிப்படைப்பது நவக்கிரகங்கள் என்றாலும் இதில் முக்கியமான ராகுவும் கேதுவும் நாக வடிவைக் கொண்டிருப்பன ஆகும். நாக தோஷத்திலிருந்து நிவாரணம் பெற நாக தேவதை அம்மனை மனம் உருகி வழிபட்டால் நாகதேவதை கருணை காட்டுவாள் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.
அதோடு ஆதி காலத்தில் மனிதர்களை விட பாம்புகள் அதிகம் இருந்தது. இது மனிதர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது. ஆனால் பாம்பை தெய்வமாக வணங்கிய மனிதன் அதை கொல்ல வேண்டாம் என்று எண்ணினான் மாறாக அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டான்.
கோவில்களில் மணி அடிப்பது எதற்காக தெரியுமா?
பொதுவாக புற்றில் இருக்கும் பெண் பாம்பு தன் உடலில் இருக்கும் ஒரு வகையான வாசனை திரவத்தை வெளியில் அனுப்பும். அதை நுகர்ந்து கொண்டு ஆண் பாம்பானது பெண்பாம்பை தேடி வரும். ஆக பெண்பாம்பு வெளியிடும் வாசனை ஆண் பாம்பிடம் செல்லாதவாறு தடுத்து விட்டாலே பாம்பின் இனப்பெருக்கத்தை பெருமளவில் குறைத்து விடலாம். இதையறிந்த ஆதி தமிழன் பாலையும் முட்டையையும் புற்றில் ஊற்ற தொடங்கினான். இதன் மூலம் முட்டையிலும் பாலிலும் இருந்து வரும் வாசனை பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தியது. பாம்பின் இனப்பெருக்கமும் குறைந்தது. இதன் காரணமாக தான் பாம்பிற்கு பாலும், முட்டையும் வைக்கப்படுகிறது.