கோயில்களில் மறந்தும் செய்யகூடாத விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

By Dinesh TGFirst Published Sep 15, 2022, 8:51 PM IST
Highlights

இங்கு பலருக்கும் கோயிலில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பது தெரிவதில்லை.. இங்கு கோயிலில் என்னவெல்லாம் செய்ய கூடாது என்பதை பார்ப்போம்..

மனிதர்களின் வாழக்கையில் ஒரு அங்கமாக தான் கோயில்கள் உள்ளது. அன்றைய காலகட்டத்தில் இருந்தே கோயில்களுக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவம் என்பது பெரிது. அனைவரின் வீடுகளிலும் கடவுளை வைத்து வணங்கி வந்தாலும், கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவது என்பது தனி சிறப்பு என்றே கூற வேண்டும். கோயிலுக்கு சென்று வணங்கும் போது நமக்கே ஒரு தெளிவு பிறக்கும் என்று கூறுவர். ஆனால் இங்கு பலருக்கும் கோயிலில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பது தெரிவதில்லை.. இங்கு கோயிலில் என்னவெல்லாம் செய்ய கூடாது என்பதை பார்ப்போம்..

முதலில் கோயில் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். கோ + இல் என்பதை தான்  கோயில் என்று அழைக்கிறோம். 'கோ' என்றால் கடவுள் அல்லது அரசன் என்று பொருள். 'இல்' என்றால் குடியிருக்கும் இடம் என்று பொருள். ஆகையால் கடவுள் குடியிருக்கும் இடத்தை தான் நாம் கோவில் என்று கூறுகிறோம். இறைவனின் அருள் எந்நேரமும் படர்ந்திருக்கும் கோவிலில் நாம் ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது. 

கோயில்களில் இருக்கும் கொடிமரம், நந்தி மற்றும் பலிபீடம் இவைகளின் நிழல்களை கூட மிதிக்க கூடாது. மேலும் விஷேச நாட்களில் கோயில்களில் அடிக்கடி அபிஷேகம் நடக்கும். அப்போது பக்தர்கள் அபிஷேகம் நடந்து முடிவதற்குள் கோயிலை சுற்றி வந்துவிடலாம் என நினைப்பார்கள். ஆனால் அபிஷேகம் நடக்கும் பொழுது கோயிலை சுற்றி வரகூடாது. குறிப்பாக, பெரும்பாலான நபர்கள் மதிய வேலையிலோ அல்லது குறிப்பட்ட நேரங்களில் கோயிலுக்கு இளைப்பாற வருவார்கள். அப்படி வருபவர்கள் களைப்பில் கோயிலில் தூங்கி விடுவார்கள். ஆனால் கோவிலில் தூங்க கூடாது. 

அதேபோன்று கோயிலில் நந்தி சிலையை பார்த்தும், நந்தியின் காதுகளில் நாம் வேண்டுதலை கூறினால் உடனடியாக நடந்துவிடும் என்பதால் வேண்டுதலை தெரிவிக்க நந்தியின் சிலைகளை தொட்டு காதில் கூறுவார்கள். அவ்வாறு நந்தி மற்றும் எந்த மூர்த்திகளையும் தொடக்கூடாது. அதேபோன்று கோயிலுக்குள் சென்றதுமே கையெடுத்து வணங்கிவிட கூடாது. அதாவது விளக்கு எரியாத சமயங்களில் வணங்க கூடாது.

கோயிலுக்கு வரும் போது தலையில் துணியோ அல்லது தொப்பியோ அணியக்கூடாது. கோயிலுக்கு வருவதற்கு முன்பாக குளித்து விட்டு தான் வரவேண்டும். குளிக்காமல் கோவில் போகக்கூடாது. கோயிலுக்குள் வந்துவிட்டால் கடவுளையே வணங்க வேண்டும். அங்கு மனிதர்கள் காலில் விழுந்து வணங்க கூடாது. அதேபோன்று கோயில்களில் இருக்கக்கூடிய படிகளில் உட்கார கூடாது. மேலும், கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் சுத்தம் என்ற பெயரில் கால்களை கழுவ கூடாது. கோயிலுக்கு செல்வதற்காக பூஜைகளுக்கு பூக்கள் வாங்கி செல்வது வழக்கம் தான். ஆனால் அப்படி பூக்கள் வாங்கும்போது வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வங்களுக்கு தர கூடாது.

அதேபோன்று கோயிலை வலம் வரும்போது வேகமாக வலம் வருதல் கூடாது. கடவுளை வணங்கும் போது நிறுத்தி நிதானமாக வணங்கி வலம் வர வேண்டும். அதோடு சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது. கடவுளை தரிசிக்க வேண்டும் என்பதற்காக இடையில் சென்று நிற்பதும், கூட்ட நெரிசலில் கடவுளை காண முடியவில்லை என்பதற்காக இடையில் செல்வதோ கூடாது. குறிப்பாக  தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது. அதேபோன்று கோயில்களில் பூஜை முடிந்த பிறகோ அல்லது கடவுளை தரிசித்த பிறகோ சிறிது நேரம் அமர்ந்துவிட்டு வரும் பழக்கம் இருக்கும். 

கோவில்களில் மணி அடிப்பது எதற்காக தெரியுமா?

ஆனால்  சிவபெருமான் கோவில்களில் மட்டுமே அமர்ந்து வரவேண்டும், பெருமாள் கோவில்களில் அமர கூடாது. கோவிலில் வைத்து எவருடனும் வீண் வார்த்தைகள் பேசக்கூடாது. மேலும் கோயிலில் விளக்கு ஏற்றினால் நன்மைகள் நடக்கும் என்பதற்காக விளக்குகளை அப்படியே ஏற்றிவிடக்கூடாது. மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்ற கூடாது.

சுகப்பிரசவம் ஆகணுமா தாயுமானவனுக்கு வாழைத்தார் வழிபாடு செய்யுங்க!

கோயில்களில் இருக்கும் புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு தான் கால் அலம்ப வேண்டும். அதேபோன்று குளத்தில் கல்லைப் போடக்கூடாது. குறிப்பாக  கிரணம் இருக்கும் பொழுது கோவிலை வணங்க கூடாது.இத்தனையும் நீங்கள் கடைப்பிடிக்கிறீர்களா என்பதை கவனியுங்கள் இல்லையெனில்  இனி இதை மாற்றிக்கொள்ளுங்கள்.

click me!