
Pithru Dosha Remedy 21 Generations Curse : திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில், மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி அருகில் உள்ள திருவெண்காட்டில் அமைந்துள்ள ஒரு பழமையான சிவாலயம். இது தேவாரப் பாடல் பெற்ற தலமாகவும், நவக்கிரக தலங்களில் புதனுக்குரிய தலமாகவும் போற்றப்படுகிறது, இங்கு சிவன் சுவேதாரண்யேசுவரர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி உள்ளார்.
வரலாறு:
பிரம்மனிடம் வரம் பெற்ற மருத்துவன் என்ற அசுரன் தேவர்களுக்கு துன்பம் செய்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண்காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்து தேவர்களோடு போர் செய்தான். அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரை சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். ரிடப தேவர் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார். இந்த அகோர உருவை கண்ட போதே அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான்.
சரணடைந்த அசுரன் அகோர மூர்த்தியின் காலடியிலும் காயம் பட்ட ரிடப தேவர் சுவேதாரண்யவரர் சுவாமி நிறுத்த மண்டபத்திலும் இன்றும் காணலாம். தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது. காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது. இவர் திருவெண்காடர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் என பெயரும் உண்டு. தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.
அம்மன் சன்னதி:
வெளிப்ராகாரத்தில் வடமேற்கு மூலையில், தனி பிராகாரத்தில் பிரம்மவித்யாம்பிகையின் சன்னதி கிழக்கு நோக்கு அமைந்துள்ளது. பிரமனுக்கு வித்தையை உபதேசித்ததால் இப்பெயர் வந்தது. திருநாங்கூரில் மதங்க முனிவரின் புதல்வியாகத் தோன்றிய அம்பிகை, தவம் செய்து. ஈச்வரனைத் திருவெண்காட்டில் மணந்து கொண்டதாகப் பாத்ம புராணம் கூறுகிறது. பின் இரு கரங்களில் தாமரையும், அக்ஷ மாலையும் ஏந்தி, முன்னிருகரங்கள் அபய வரதமாகக் அருட்காட்சி வழங்குகிறாள் அம்பிகை.
காசியை விட மூன்று மடங்கு சாபங்கள் தீரும்: நம் காசிக்கு சென்று கங்கை நீரில் குளித்தால் ஏழு தலைமுறைகளுக்கு நாம் செய்த பாவங்கள் தீரும் என்று ஐதீகம் உள்ளது. ஆனால் நம் தமிழ்நாட்டில்உள்ள திருவெண்காட்டில் ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் திருத்தலம்காசிக்கு சமமான ஆறு தலங்களில் ஒன்றானது காசியில் இருப்பது விஷ்ணு கயா. இங்கு வழிபட்டால் 7 தலைமுறைகளின் பூர்வ ஜன்ம பாவங்கள் நீங்கும் என்பது ஐதிகம். ஆனால் திருவெண்காட்டிலுள்ள ருத்ர கயாவை வழிபட்டால் காசியைவிட 3 மடங்கு அதாவது 21 தலைமுறைகளின் பிதுர் சாபங்கள் நீங்கும் என்கிறார்கள்.
பலன்கள்:
திருத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்து விட்டு சென்றால் நம் பாவம் தீர்ந்து வாழ்க்கையில் முன்னேற்றம் பெறலாம் என்று கூறப்படுகிறது குழந்தைகளின் கல்வி சிறந்து விளங்குவார் என்றும் கூறப்படுகிறது. நாம் எடுத்த காரியம், விரைவில் முடியும் என்றும் சொல்லப்படுகிறது அது மட்டுமல்லாமல் இந்த தீர்த்தத்தில் நீராடி சென்றால் நரம்பு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் விரைவில் குணமடையும் என்றும் கூறப்படுகிறது.