
மது அருந்துவார்கள் வீட்டில் மிகப் பிரச்சனையை உண்டாக்கி வருகின்றனர் அவர்களின் குடும்ப வாழ்க்கை சரியில்லாதமாகவே இருக்கும். அந்த குடி படத்தை விட ஆத்து கோயில் என்று கூறப்படும் அய்யனார் கோயிலுக்கு சென்று மதுப்பழக்கத்திலிருந்து விடுபடும் கயிறை கட்டினால் மது பழக்கத்திலிருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது இந்த கோயிலுக்கு இந்த வழக்கம் உண்டு. முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கோயில் வரலாறு:
சென்னையில் உள்ள கேகே நகரில் மத்தியில் எம்ஜிஆர் நகருக்கு அடுத்து அய்யனார் கோயில் ஒன்று உள்ளது அந்த கோயிலை ஆத்து கோயில் என்றும் சிலர் கூறுவர். இந்த ஆத்து கோயில் சினிமா வட்டாரங்களில் மிகப் பிரபலமான கோயில் ஏனென்றால் அய்யனார் மிகப்பெரிய உருவ சிலையில் இங்கு அமர்ந்திருப்பார். அடையாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.இது நடிகர் சிலம்பரசன் நடித்த 'மாவீரன்' திரைப்படத்திலும் இடம்பெற்றுள்ளது. இந்தக் கோயிலை ஆத்து முனீஸ்வரர் கோயில் என்றும் சிலர் கூறுவர்.
இந்த ஆத்து கோயிலுக்கு மிக சிறப்பான ஒரு முறை உள்ளது அது என்னவென்றால் அடிமைப்பட்டு இருக்கும் மனிதர்களுக்கு இந்த கோயில் விடுவிப்பதற்காக கயிறு கட்டும் முறை இங்கு உள்ளது. ஒரு கையில் ஐம்பது ரூபாய் என்று கூறப்படுகிறது அந்த கயிறை கொண்டு வந்து கயிறு கட்டுவதற்கு ஒரு சிலர் அங்கு பணியில் உள்ளனர் அவர்களிடம் கொடுத்தால் அவர்கள் முனீஸ்வரன் முன் வைத்து அந்த முனிஸ்வரன் மீது சத்தியம் செய்து ,குடும்ப உறுப்பினர்கள் மீது சத்தியம் செய்து, ஒரு எலுமிச்சம்பழம் மீது சூடகம் ஏற்றி அதன் மீது சத்தியம் செய்ய வைக்கின்றனர் அதன் பிறகுநபருக்கு அந்த கயிறை கட்டுகின்றனர் இந்த கயிறை அகற்றினாலோ அல்லது மீண்டும் அதுவே அருந்தினாலோ உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறிய அனுப்புகின்றனர்.
மண்ணால் ஆனதல்ல இந்த லிங்கம்! தாமரைத் தண்டு லிங்கத்தின் ரகசியமும், பெருமகளூர் கோயிலின் மகா மகிமையும்!
ஆத்து கோயிலின் தெய்வங்கள்:
பெரிய அளவில் அய்யனார் சிலையும் அதன் கீழ் முனீஸ்வரர் சிலையும் உள்ளது. அதன் பிறகு கோயிலுக்குள் சென்றால் கருவறையில் அங்காள பரமேஸ்வரி அம்மன் அருள் பாலிக்கின்றார் அவருக்கு வலது புறத்தில் விநாயகர் உள்ளார் இடதுபுறத்தில் முருகன் வள்ளி தெய்வானையுடன் அருள் பாலிக்கின்றார். கோயிலின் பின்புறத்தில் நாக தெய்வங்கள் உள்ளன துர்க்கை அம்மன் உள்ளார்.
திருவிழாக்கள்:
இந்த கோயிலில் ஆடி மாத திருவிழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறும் அங்கு சுற்றுப்புறத்தில் இருக்கும் பக்தர்கள் மாலை போட்டு கொடியேற்றத்துடன் மிகச் சிறப்பாக நடக்கும் தீமிதி திருவிழா மிக சிறப்பாக நடக்கும் சித்திரை திருவிழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். பௌர்ணமி தேதிகளில் இரவு முழுவதும் இந்த கோயிலில் தங்கும் வழக்கமும் இங்கு உண்டு.