
திருமுருகநாதர் கோயில் வரலாறு:
1008 அண்ணங்களையும் அளவில்லாத காலம் அடக்கி ஆளும் மரம் பெற்ற சூரபத்மினி தேவர்களை சிறை பிடித்து துன்புறுத்தி வந்தான் தேவர்கள் சேனாதிபதியான குமார கடவுள் தேவர்கள் துயர் நீக்க ிருலம் கொண்டார் கந்த சஷ்டி விரதம் இருந்து தாயிடம் சக்திவேல் வாங்கி சூரபத்வன் மற்றும் அவரது தம்பி யாரை சம்காரம் செய்தார் இதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவபெருமானின் அறிவுரைப்படி நொய்யால் நதிக்கரையில் அமைந்துள்ள மாதவி வனநாதரை வணங்க வந்தார் அப்போது தன் வெற்றிவேலால் தீர்த்தமொன்றை தோற்றுவித்தார் என்று பெயர் உண்டு . தண்ணீரை கொண்டு அபிஷேகம் செய்து மூலவரையும் அன்னையும் மேற்கு நோக்கியபடி பிரதிஷ்டை செய்த வணங்கினார் இதனால் கொடிய பிரம்மஹத்தி தோஷம் நீங்க பெற்றார் முருகன் இக்கோயிலின் வெளியே உள்ள வேம்பம்படி முருகன் சன்னதியின் அருகே நீங்கிய பிரம்மஹத்தி தோஷமானது ஒரு சதுரக்கலாக உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன கல்லை இன்றும் காணலாம்.
இழந்த பொருளை மீண்டும் பெறும் வரலாறு:
சுந்தரமூர்த்தி நாயனார் சேரமான் பெருமாளிடம் பாடி பரிசு பெற்ற பொருட்களுடன் சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தார் அப்போது திரு முருகன் பூண்டி அருகே வரும்போது சுந்தரரும் அவன் உடன் வந்தவரும் சோர்வு காரணமாக அருகில் இருந்த திருமுருகநாத சுவாமி திருக்கோயில் அருகே உள்ள பிள்ளையார் கோயிலில் தங்கினர். அதை அறிந்த சிவபெருமான் தனது பக்தன் தன்னைக் காண வராமல் வேறு இடத்தில் தங்கிருப்பதை விரும்பாமல் அவர்களிடம் திருவிளையாடல் நிகழ்த்த எண்ணினார். தனது பூதக்கண்ணிகளை திருடர்கள் உருவில் அனுப்பி சுந்தரிரிடம் வழிப்பறி செய்யும் படி கூறினார். கொள்ளையர் போல் வந்த பூதக்கணங்கள் பரிசுப் பொருள்களை கொள்ளையடித்துச் சென்றதால் கவலை அடைந்தார் சுந்தரர்.
திருமுருகன்பூண்டி சென்று வழிப்பறித் திருடர்கள் இருக்கும் சொந்த ஊரில் அந்த பயத்திலிருந்து பக்தர்களை காப்பாற்றாமல் நீயும் அம்பிகையும் எதற்காக இங்கே இருக்கிறீர்கள் என்று இறைவனை திட்டி பாடல் பதிகம் பாடினார். சுந்தரமூர்த்தி நாயனரின் ஆற்றாமை கண்டு தாளமாலும் சுந்தரனின் தமிழ் பதிகத்தால் மகிழ்ந்தும் திருமுருக நாதசுவாமி அத்தனை பொருட்களையும் பூதக்களங்கள் மூலம் அவரிடமே திரும்ப சேரும்படி செய்யச் செய்தார் எனவே இழந்த பொருளை மீண்டும் பெற்றிட பரிகாரத் தளமாக திருமுருகன் பூண்டி விளங்குகிறது.
திருமுருகநாதர் திருக்கோயில் வழிபாட்டு பலன்கள்:
இழந்த பொருள் அல்லது தொலைந்து போன பொருள் திரும்ப கிடைக்க இந்த கோயிலில் வந்து வழிபாடு செய்தால் திரும்ப கிடைக்கும் என்பது ஐதீகமாக சொல்லப்படுகிறது. அதே போன்று ஜோதிட ரீதியாக ஜாதகத்தில் கேது பகவான் பாதிப்பு இருந்தால் இங்கு வந்து வழிபாடு செய்ய சிறப்பான பலன் கிடைக்கும். இந்த கோயிலானது கேது பரிகார தளமாக விளங்குகின்றது.
கோயிலில் கேது பகவானுக்கு என்று தனி சன்னதி அமைத்து பூஜைகள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கேது தோஷத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு அரிய பரிகாரத் தளமாக இந்த கோயில் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராட செய்த பாவங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம். அதே போன்று பில்லி, சூனியம், ஏவல் ஆகியவை நீங்கும். திருமண பாக்கியம் கிடைக்கவும், குழந்தை பாக்கியத்திற்காகவும் பக்தர்கள் கோயிலில் வேண்டிக் கொள்கின்றனர்.