
Thirumuruganpoondi Thirumuruganatha Swamy Temple History : திருமுருகநாத சுவாமி கோயில் என்பது திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ள பழமையான சிவன் கோயில் (Thirumuruganatha Swamy Temple Tiruppur). இந்த கோயிலில் வரலாறு, சிறப்பு ,அமைப்பு தெய்வீக வழிபாடு என்று ஒவ்வொன்றையும் விரிவாக பார்க்கலாம்.
கோயிலின் பெயருக்கான காரணம்:
ஒருமுறை துர்வாச முனிவர் கற்பக உலகத்தில் இருந்து வேண்டியதை வழங்கும் கற்பக விருச்சமான மாதவி என்ற குருக்கத்தி மரத்தை பூவுலகிற்கு கொண்டு வர எண்ணி இத்தளத்திற்கு கொண்டு வந்தார். ஆதலால் இவ்விடத்திற்கு மாத விமானம் என்றும் இத்தல இறைவன் மாதவி நாதர் என்றும் புராண காலத்தில் வழங்கப்பட்டார் வேண்டும் வரம் அருளும் மாதவி நாதரை வணங்கி முருகப்பெருமான் பிரம்ம கத்தி தோஷம் நீங்க பெற்றதால் இத்தலம் திருமுருகன்பூண்டி என்றும் தல நாதர் திருமுருக நாதசுவாமி என்றும் அழைக்கப்படுகிறார். மற்ற பெயர்களும் உண்டு முருகனாதேஸ்வரர் மாதவிவனநாதர் பெயர்களும் உண்டு.
திருமுருகநாதர் திருக்கோயில் வரலாறு:
1008 அண்ணங்களையும் அளவில்லாத காலம் அடக்கி ஆளும் மரம் பெற்ற சூரபத்மினி தேவர்களை சிறை பிடித்து துன்புறுத்தி வந்தான் தேவர்கள் சேனாதிபதியான குமார கடவுள் தேவர்கள் துயர் நீக்க ிருலம் கொண்டார் கந்த சஷ்டி விரதம் இருந்து தாயிடம் சக்திவேல் வாங்கி சூரபத்வன் மற்றும் அவரது தம்பி யாரை சம்காரம் செய்தார் இதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவபெருமானின் அறிவுரைப்படி நொய்யால் நதிக்கரையில் அமைந்துள்ள மாதவி வனநாதரை வணங்க வந்தார் அப்போது தன் வெற்றிவேலால் தீர்த்தமொன்றை தோற்றுவித்தார் என்று பெயர் உண்டு . தண்ணீரை கொண்டு அபிஷேகம் செய்து மூலவரையும் அன்னையும் மேற்கு நோக்கியபடி பிரதிஷ்டை செய்த வணங்கினார் இதனால் கொடிய பிரம்மஹத்தி தோஷம் நீங்க பெற்றார் முருகன் இக்கோயிலின் வெளியே உள்ள வேம்பம்படி முருகன் சன்னதியின் அருகே நீங்கிய பிரம்மஹத்தி தோஷமானது ஒரு சதுரக்கலாக உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன கல்லை இன்றும் காணலாம்.
இழந்த பொருளை மீண்டும் பெறும் வரலாறு:
சுந்தரமூர்த்தி நாயனார் சேரமான் பெருமாளிடம் பாடி பரிசு பெற்ற பொருட்களுடன் சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தார் அப்போது திரு முருகன் பூண்டி அருகே வரும்போது சுந்தரரும் அவன் உடன் வந்தவரும் சோர்வு காரணமாக அருகில் இருந்த திருமுருகநாத சுவாமி திருக்கோயில் அருகே உள்ள பிள்ளையார் கோயிலில் தங்கினர். அதை அறிந்த சிவபெருமான் தனது பக்தன் தன்னைக் காண வராமல் வேறு இடத்தில் தங்கிருப்பதை விரும்பாமல் அவர்களிடம் திருவிளையாடல் நிகழ்த்த எண்ணினார். தனது பூதக்கண்ணிகளை திருடர்கள் உருவில் அனுப்பி சுந்தரிரிடம் வழிப்பறி செய்யும் படி கூறினார். கொள்ளையர் போல் வந்த பூதக்கணங்கள் பரிசுப் பொருள்களை கொள்ளையடித்துச் சென்றதால் கவலை அடைந்தார் சுந்தரர்.
திருமுருகன்பூண்டி சென்று வழிப்பறித் திருடர்கள் இருக்கும் சொந்த ஊரில் அந்த பயத்திலிருந்து பக்தர்களை காப்பாற்றாமல் நீயும் அம்பிகையும் எதற்காக இங்கே இருக்கிறீர்கள் என்று இறைவனை திட்டி பாடல் பதிகம் பாடினார். சுந்தரமூர்த்தி நாயனரின் ஆற்றாமை கண்டு தாளமாலும் சுந்தரனின் தமிழ் பதிகத்தால் மகிழ்ந்தும் திருமுருக நாதசுவாமி அத்தனை பொருட்களையும் பூதக்களங்கள் மூலம் அவரிடமே திரும்ப சேரும்படி செய்யச் செய்தார் எனவே இழந்த பொருளை மீண்டும் பெற்றிட பரிகாரத் தளமாக திருமுருகன் பூண்டி விளங்குகிறது.
கூப்பிடு விநாயகர்:
பிள்ளையார் கூப்பிடு பிள்ளையார் என்ற பெயரில் அருள் புரிகிறார். சுந்தரன் பரிசுப் பொருள்கள் சிவபெருமான் பூதங்களை கொண்டு கொள்ளை அடித்த பின் தன் கோயிலில் வந்து தங்கியவர்கள் தீயருவதை தாங்காமல் விநாயகர் சுந்தரரை கூப்பிட்டு பொருள் இருக்கும் இடத்தை தன் தும்பிக்கையால் இருக்கும் இடத்தை காட்டியதால் இவருக்கு கூப்பிடு விநாயகர் என்று பெயர் பெற்றது இந்த கோயில் மிகச் சிறப்பாக இருப்பவர் கூப்பிடு விநாயகர் தான்.
திருமுருகநாதர் திருக்கோயில் சிறப்புகள்:
இறைவன் சுயம்புலிங்கமாக விளங்குகிறார் சுவாமியும் அம்பாலும் மேற்கு பார்த்த படியும் மூலவர் அம்பாள் வடக்கு நோக்கி அமைந்துள்ளது முருகப்பெருமானால் உருவாக்கப்பட்ட திருத்தலமாகும். இந்த தளத்திலுள்ள முருகன் சிவ வழிபாடு செய்தால் மேலும் மயிலும் இன்றி காணப்படுகிறார் இத்தலத்திற்கு துர்வாசர் கற்பக உலகில் இருந்து மாதவி மரத்தை கொண்டு வந்தார். என்ற சிறப்பு இந்த கோயிலுக்கு உள்ளது. இந்த கோயிலில் கேது பரிகார தளமாக இந்த கோயில் உள்ளது அவருக்கென்று தனி சன்னதி அமைத்து பூஜைகள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது கேது தோஷத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு அரிய பரிகாரத் தளமாக விளங்குகிறது.
திருமுருகநாதர் திருக்கோயில் வழிபாட்டு பலன்கள்:
தொலைந்த பொருளை கண்டுபிடித்து கொடுப்பது இந்த கோயில் மிகச் சிறப்பாக உள்ளது. கேதுவில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் கேது பகவானுக்கு பூஜை செய்வது இந்த கோயிலில் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. பிரம்மா நீராத நத்தில் நீராடி சுவாமியை மனம் உருகி வேண்டிக்கொள்ள நாம் செய்த பாவங்கள் நமக்கு மற்றவரிடம் அந்த சாபங்கள் மனநோய் பில்லியவல் சூன்யம் ஆகியவை நீங்கும். தீராத தோஷங்களும் நீங்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.