மதுரை மீனாட்சியம்மனுக்கு தங்க கவசம், வைர கிரீடம் அணிவிக்கும் சிறப்பு வைபவம்

Published : Jan 17, 2026, 03:26 PM IST
Meenakshi Amman Temple

சுருக்கம்

தை அமாவாசையை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மனுக்கு வைர கிரீடத்துடன் தங்க கவசம் அணிவிக்கப்படுகிறது. 

பாண்டிய குல பேரரசி பாண்டிய நாட்டுக்கு அரசி என்று சொல்லக்கூடிய மதுரை மீனாட்சிக்கு ஒவ்வொரு மாதமும் விசேஷமான திருவிழாக்கள் நடைபெறும். இப்படி நடைபெறும் திருவிழாவில் மதுரை மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் ப ஆகியோர் சிறப்பு அலங்காரத்துடன் மதுரை மக்களுக்கு காட்சியளிப்பார்கள். இதனை காண கோடான கோடி மக்கள் காத்திருந்து தரிசனம் செய்வார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், தமிழ்ப் புத்தாண்டு, சித்திரைத் திருவிழா போன்ற முக்கிய தினங்களில் தங்கக் கவசம், வைரக் கிரீடம் போன்ற அலங்காரங்கள் அணிவிக்கப்படுவது வழக்கம். தை அமாவாசை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு தங்க கவசமும் வைர கிரீடத்துடன் மீனாட்சி அம்மாள் அணிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தை அமாவாசையின் சிறப்பு தரிசனம்: தை 

அமாவாசையை முன்னிட்டு நாளை அதாவது ஜனவரி 18 தேதி அன்று காலை, மாலை என இரு வேளைகளிலும் மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம், தங்கக்கவசமும், அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு தை அமாவாசை சிறப்பு தரிசனம் நடைபெறும். மேலும் நாளை முதல் அதாவது ஜனவரி 18 19, 20ம் தேதி வரை மீனாட்சியம்மன் தங்க கவசமும் வைர கிரீடத்தின் காட்சியளிப்பார் என்று கோயில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது நாயக்கர் காலத்து கவசம் எனக் கூறப்படுகிறது. அக்காலத்தில் இருந்து கடைப்பிடித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

தங்க கவசம்: 

யாருமே அவ்வளவு சீக்கிரத்தில் காண முடியாத காட்சியான வைர கிரீடம் மற்றும் தங்க கவசத்தை 365 நாட்களில் ஒரு சில நாட்களில் மட்டும் மதுரை மீனாட்சி அணிவித்துக் கொண்டு காட்சியளிக்கின்றார்.இதில் குறிப்பாக வைர கிரீடம் மற்றும் தங்க கவசத்தை 365 நாட்களில் ஒரு சில நாட்களில் மட்டும் மதுரை மீனாட்சிக்கு அணியப்படுகின்றது. அதாவது தமிழ் புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு, தை அமாவாசை, தீபாவளி போன்ற தினங்களில் மட்டும் மதுரை மீனாட்சிக்கு வைர கிரீடம் மற்றும் தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் பல்வேறு பூஜைகள் செய்யப்படுகின்றது.

தங்க கவசம் மற்றும் வைர கிரீடத்தின் விவரம்: 

வைர கிரீடம் 3 ஆயிரத்து 500 கிராம் எடையுள்ளது. இதில் வெளிநாட்டில் பட்டை தீட்டப்பட்ட 399 காரட் எடையுள்ள முதல் தரமான 3 ஆயிரத்து 345 வைர கற்களும், 600 காரட் எடையுள்ள 4 ஆயிரத்து 100 சிவப்பு கற்களும் பதிக்கப்பட்டுள்ளன. இது தவிர எட்டரை காரட் எடையுள்ள ஒரு மரகத கல்லும், அதே எடையில் ஒரு மாணிக்க கல்லும் பொருத்தப்பட்டுள்ளன. கிரீடத்தின் உயரம் பதிநான்கரை அங்குலம். அதன் அடிப்பகுதி சுற்றளவு 20 அங்குலம். சிற்ப சாஸ்திர முறைப்படி அமைந்தது.மேலும், 7000 கிராம் எடை கொண்ட மதுரை மீனாட்சி அம்மன் தங்க கவசம் மற்றும் வைர கிரீடம் இந்த ஆண்டு தை அமாவாசைக்கு முன்னிட்டு மூன்று நாட்களுக்கு மதுரை மீனாட்சி அம்மன்க்கு சாத்தப்பட்டு சிறப்பான பூஜைகள் நடைபெறும் என்பதும் கூறப்படுகிறது.

மீனாட்சி அம்மனின் தங்க கவசமும் வைர கிரீடத்திலும் ராணிஅலங்காரம்: 

மீனாட்சியம்மன் கண்களில் நட்சத்திரமாக மின்னும் வைர கிரீடத்தாலும் உடம்பு முழுவதும் பளபளக்கும் தங்க கவசத்தாலும் மீனாட்சி அம்மனை பார்ப்பதற்கு இரண்டு கண்கள் பத்தவில்லை என்றே கூறலாம் மிக அழகாக சிரிப்பு முகத்துடன் கையில் களியும் தலையில் சூடாமணியும் அணிந்து கொண்ட மதுரையே ஆளும் புலப்பேரரசி மீனாட்சி பார்ப்பதற்கு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். ஒருமுறை மட்டுமே அளிக்கும் இந்த காட்சியை பார்த்தால் கணவன் மனைவியாக கொண்டிருக்கும் இந்த கோயிலுக்கு சென்று வந்தால் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனை விரைவில் தீர்ந்து நலமுடன் வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது அம்மனை தரிசித்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. பெண்கள் ஒரு குடும்பத்தினை வழிபடும் மீனாட்சியாகவும் இருப்பதும் குறிப்பாக ஆளும் திறனையும் குடும்பத்தை வழிநடத்தும் திறமையும் எடுத்துக்காட்டாக விளங்குவது மீனாட்சி இந்த கோலத்தில் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

கும்பாபிஷேகம்

மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது ஆனால் இதன் தேதி அதிகாரப்பூர்வமாக வெளிப்படவில்லை.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

கணவன் மனைவி ஒற்றுமைக்கு வழிபட வேண்டிய சிவன் கோயில்!
கலை, கல்வி, காசு பணம் ஆகியவற்றில் சிறந்து விளங்க இந்த 9 நாட்கள் என்ன செய்ய வேண்டும்?