
ஞானம், செல்வம் மற்றும் கலை ஆகியவற்றை பெறுவதற்குரிய ஒரு சிறந்த வழிபாடு தான் இந்த சியாமளா நவராத்திரி. மீனாட்சி அம்மன் மற்றும் மந்திரிணி தேவியின் அம்சமான ராஜசியாமளா தேவியை வழிபடுவதற்குரிய ஒரு சிறப்பான நாளாக இந்த சியாமளா நவராத்திரி கடைபிடிக்கப்படுகிறது. சியாமளா தேவி எப்போது வருகிறது என்று கேட்டால், ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் வரும் அமாவாசைக்கு பிறகு பிரதமை திதி முதல் நவமி திதி வரையிலான 9 நாட்களும் சியாமளா நவராத்திரி கடைபிடிக்கப்படுகிறது.
கல்வி, ஞானம், கலை, செல்வம் ஆகியவற்றில் சிறந்து விளங்கவும், எதிரிகளை வெல்லும் ஆற்றல் கிடைக்கவும் சியாமளா தேவி நவராத்திரி வழிபாடு கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் வரும் 19ஆம் தேதி முதல் சியாமளா தேவி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. நவராத்திரி ஒரு அம்பிகையை வழிபடும் சாக்தம் என்று தனித்த மதமாக விளங்கியபோது பன்னிரண்டு மாதங்களுமே நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள். தற்போது அதுவே நான்கு நவராத்திரிகளாக மாற்றம் கொண்டன. ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி, சியாமளா நவராத்திரி, வசந்த நவராத்திரி என்று நான்கு நவராத்திரிகளில் ஒன்பது நாட்கள் நடைபெறும் அதில் மிகவும் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட இருப்பது தை மாதத்தில் வரும் சியாமளா நவராத்திரி திருவிழா தான்.சியாமளா நவராத்திரி பூஜை தை அமாவாசை கழிந்த மறுநாள் பிரதமையிலிருந்து நவமி வரை அம்பிகையை, பூரண கலசத்தில் ஆவாஹனம் செய்து, பூஜிக்கலாம்.
இந்த நாளில் கல்விக்கு அதிபதியான சரஸ்வதியை வழிபடுகின்றனர். சரஸ்வதி தேவி பச்சை நிறத்தில் உடைய அம்பாளாக இருப்பார் அது மதுரை மீனாட்சி அம்மன் குறிக்கும். மீனாட்சி அம்மன் கோயிலில் சியாமளா நவராத்திரி மிகச் சிறப்பாக நடக்கும்.புத்தகம், என்று பேனா போன்ற பொருட்களை சரஸ்வதி தேவியின் படத்தின் முன் வைத்து வழிபடுகின்றனர்.
கடைப்பிடிக்க வேண்டியவை:
சியாமளா நவராத்திரி நடைபெறும் நாள்களில் காலையும் மாலையும் பூஜை அறையில் விளக்கேற்றி அம்பாளை ஸ்தோத்திரம் செய்ய வேண்டும். சியாமளா தண்டகம் போன்ற ஸ்லோகங்களை வாசிக்கத் தெரிந்தவர்கள் பாராயணம் செய்யலாம். லலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்து பாயசம் நிவேதனம் செய்தால் மிகுந்த பலன்கள் உண்டாகும். பச்சை வண்ண உடையை அம்பிகையின் படத்துக்கு அல்லது திருவுருவத்துக்கு சாத்தி அதை தானம் செய்தால் துன்பங்கள் தீர்ந்து நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.