ஆந்திராவில் உள்ள கர்னூல் என்னும் மாவட்டத்தில் இருந்து 73 கி.மீட்டர் தொலைவில் உள்ளது பனகனப்பள்ளி. இதற்கு மேற்கே நீரூற்றை ஒட்டி கட்டப்பட்ட ஆலயம் தான் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவில். மலைப்பாறைகள், குகைகள், பெரிய பெரிய கற்கள் என இவற்றுக்கு இடையில் அழகாக அமைந்துள்ளது இத்தலம்.
சிவபக்தர் ஒருவர் இறைவனை காணும் ஆர்வத்தால் இந்த இடத்தில் தவமிருந்தார். அவரது பக்தியை கண்டு உருகி மகிழ்ந்த இறைவன் அவர் முன் தோன்றினார். அப்போது சிவபக்தர் மகிழ்ச்சி பெருக்கில் பக்தர் நேனு சிவனே கண்டி என்று சொல்லியபடி ஆனந்த கூத்தாடினார்.
இது தான் நாளடைவில் நேனுகண்டி என்றாகி யாதந்தி என்ற பெயரில் நிலைத்தது. இந்த கோவில் 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் வம்சத்தை சார்ந்த மன்னர் ஹரிஹாரா புக்கரர்யாவால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது . இந்த கோவிலில் சில காலம் தங்கியிருந்து வீரபிரம்மேந்திர ஸ்வாமி கால ஞானம் என்னும் நூலை இயற்றியுள்ளார். இவரது கணிப்புபடி இந்த நந்தி வளர்ந்து உயிர்பெறும் போது இந்த கலியுகம் முடியும் என்று சொல்லப்படுகிறது.
இத்தல வரலாறு சுவாரஸ்யமானது. அகத்திய முனிவர் பெருமாளுக்கு கோயில் கட்ட விரும்பினார். அதன்படி பெருமாள் சிலையை வடித்தபோது சிலையில் ஒவ்வொரு முறையும் ஒரு குறையை எதிர்கொண்டார். அவர் எத்தனை முறை முயற்சித்தும் பெருமாளின் சிலை முழுமை அடையவில்லை. அவரால் பெருமாள் கோவில் கட்ட முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. அதனால் மனம் உருகி சிவபெருமானை வழிபட்டார்.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது .. ஏன் புதனுக்கு அவ்வளவு முக்கியத்துவம்!
சிவனார் பார்வதியுடன் அகத்தியர் முன் தோன்றி இது விஷ்ணுவுக்கு தகுந்த இடம் இல்லை என்றார். உடனே அகத்தியர் அப்படியெனில் தாங்கள் தேவியாருடன் இங்கு தங்க வேண்டும் என்று கேட்கவே சிவனும் பார்வதியும், உமா மகேஸ்வரராக ஒரே கல்லில் ஒருவராக எழுந்தருளினார்கள். மற்ற தலங்களை போல் இல்லமல் இந்த தலத்தின் மூலவர் அர்த்த நாரீஸ்வரராக காட்சி தருவது சிறப்பு.
இங்கு கருவறைக்கு பின்னால் உள்ள பாதையில் அகஸ்திய புஷ்கரணி தீர்த்தம் உள்ளது. அதை தொடர்ந்து சென்றால் குகைக்கோயில்கள் உள்ளது முதல் குகையில் சிவலிங்கம் உள்ளது. இங்குதான் அகத்தியர் தவமிருந்தாராம். அடுத்த குகையில் வெங்கடேஸ்வரர் அருள்பாலிக்கிறார். குகையின் உள்ளே குனிந்து சென்றால் தான் லிங்கத்தை தரிசிக்க முடியும்.
இறந்தவங்க சொர்க்கத்துக்கு போக இந்த 4 பொருள் பக்கத்துல இருக்கணுமாம்!
இந்த கோயிலின் மற்றொரு சிறப்பு இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடத்தில் காகங்கள் உள்ளே நுழையாது. அகத்தியர் தவத்தில் காகங்கள் குறுக்கீடு செய்ததால் அந்த இடத்தில் காகங்கள் வருவதில்லையாம். காகம் சனி பகவானின் வாகனம் என்பதால் காகம் நுழையாத இடத்தில் சனி பகவானும் வரமாட்டாராம்.
இந்த தலத்தின் சிறப்பு ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவிலில் சிவபெருமானுக்கு எதிரில் உள்ள நந்திபகவான் சிலையானதுசிறிது சிறிதாக வளர்ந்துவருகிறது. இதனால் நந்தியை சுற்றியுள்ள சில தூண்கள் அகற்றப்பட்டுள்ளது. நந்தியின் வளர்ச்சி படிப்படியாக அதிகரிக்கும் போது இன்னும் சில தூண்கள் அகற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
20 ஆண்டுகளுக்குள் நந்தியின் அளவு ஒரு அங்குலம் வளர்வதாக தொல் பொருள் ஆய்வாளர்களும் உறுதிபடுத்தியுள்ளார்கள். இதற்கு காரணம் நந்தியின் சிலை செய்யப்பட்ட கல்லானது நாளடைவில் விரியும் தன்மை கொண்டதால் அது வளர்வது போல் தோன்றுகிறது என்பது தான். மக்களிடையே இந்த நந்தி தானாக வளர்வதாகவும் இவை உயிர்பெறும் போது இந்த கலியுகம் அழியக்கூடும் என்றும் நம்பிக்கை உள்ளது. நேரம் கிடைத்தால் நந்திபகவானை தரிசிக்க சென்று வாருங்கள்.