இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய பித்ருக்களுக்கு ஷ்ராத், தர்ப்பணம் கொடுப்பது மிக மிக முக்கியம். இவை எல்லாம் நமக்கு தெரியும். இதையெல்லாம் சரியாக செய்வதால் முன்னோர்களுக்கு சொர்க்கம் கிடைப்பதாக ஐதிகம்.
இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய பித்ருக்களுக்கு ஷ்ராத், தர்ப்பணம் கொடுப்பது மிக மிக முக்கியம். இவை எல்லாம் நமக்கு தெரியும். இதையெல்லாம் சரியாக செய்வதால் முன்னோர்களுக்கு சொர்க்கம் கிடைப்பதாக ஐதிகம்.
இறந்தவர்களுக்கு உரிய நேரத்தில் செய்யும் கடமைகள் அவர்களுக்கு சொர்க்கத்தை அளிக்கும் போது சில விஷயங்கள் இன்னும் மங்களகரமாக கருதப்படுகின்றன. இவை மரணத்தின் போது அருகில் இருந்தால் அதனால் அவர்கள் சொர்க்கத்துக்கு போவார்கள் என்று சொல்கிறார்கள் கருடபுராணத்தில் மிகவும் மங்களகரமாக கருதப்படும் பொருள்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். கருட புராணத்தின்படி மரணத்தின் போது இந்த பொருள்கள் அருகில் இருந்தால் கர்மா செய்ய தேவையில்லை. ஏனெனில் இந்த மங்களகரமான பொருள்கள் இறந்தவர்களுக்கு சொர்க்கத்துக்கு செல்லும் வழியை திறக்கின்றன.
அப்படி சொல்லப்படும் மங்களகரமான பொருள்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
துளசி
மகாலஷ்மியின் அம்சமான துளசி இருக்கும் இடத்தில் மகா விஷ்ணு வீற்றிருப்பார் என்று சொல்வதுண்டு. ஜோதிட சாஸ்திரப்படி மரணத்தின் படி ஒரு நபரை சுற்றி துளசி செடி இருந்தால் அல்லது துளசி இலைகள் அவரது வாய் மற்றும் நெற்றியில் வைத்தால் இறந்தவர் எமலோகம் செல்லாமல் சொர்க்க வாசல் செல்வார்கள் என்பது ஐதிகம். இன்றும் கிராமப்புறங்களில் இது வழக்கமாக உள்ளது.
கங்கை நீர்
கங்கை நீர் புனிதமான தீர்த்தம் ஆகும். இதை வீட்டில் தெளித்தால் வீட்டில் இருக்கும் துர்சக்திகள் காணாமல் போகும். வீட்டில் நன்மை நடக்கும். கங்கை நீர் இந்துமதத்தில் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. கருட புராணத்தின்படி ஒருவரின் மரணம் நெருங்கிவிட்டால் அவரது வாயில் கங்கை நதியை ஊற்றவேண்டும். இப்படி செய்வதால் அவர்களுடைய பாவங்கள் அழிந்து நேராக சொர்க்கத்துக்கு செல்வார்கள் என்பது நம்பிக்கை. அதனால் வீட்டில் எப்போதும் கங்கை நீர் வைத்திருப்பது விசேஷம்.
தர்ப்பை புல்
மகாவிஷ்ணுவின் அவதாரமான பரஹாவின் உடலில் உள்ள முடியிலிருந்து உருவானது தான் இந்த தர்ப்பை புல். ஸ்ரீமத் பாகவத மகாபுராணத்தில் 3 வது தொகுதியில் 13 வது அத்தியாயத்தின் 35 வது பாடலிலும் 9 வது அத்தியாயத்தின் 12 வது பாடலிலும் தர்மகாண்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.
துன்பம் வரும் வேளையில் இந்த மந்திரம் சொல்லுங்கள்.. துணிச்சல் பிறக்கும்!
கருட புராணம் இந்து மதத்தின்படி விஷ்ணு பரஹா வடிவத்தை எடுத்து ஹிரண்ய அரக்கனை கொன்றார். அப்போது தண்ணீரில் நனைந்த உடலை அசைத்து தண்ணீரை உதிரும் போது அவர் உடலில் இருந்து முடிகள் பூமியில் விழுந்தது அதிலிருந்து தோன்றியது தான் தர்ப்பை புல் என்று சொல்வதுண்டு.
இது பயன்பாட்டில் முக்கியமானது. இறக்கும் நிலையில் உள்ள ஒருவரை இந்த தர்ப்பை புல் அடங்கிய படுக்கையில் படுக்க வைப்பதன் மூலம் அவர்களுக்கு சடங்குகள் செய்யமாலேயே சொர்க்கத்தில் நுழையும் சிறப்புகள் உண்டு.
கணவன் மனைவி சச்சரவுகளை தீர்க்கும் பிரயாக்ராஜ் புண்ணிய தலம்..
எள்
தர்ப்பணத்தில் சிறப்பு வாய்ந்தது எள் என்பது தெரியும். கறுப்பு எள் கலந்த நீரில் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பானது. இறக்கு நிலையில் உள்ளவர்களுக்கு கருப்பு எள்ளை தானம் செய்தால் அவர்களிடமிருந்து தீங்கு விளைவிக்கும் கெட்ட சக்திகள், பிசாசுகள் நெருங்காமல் இருக்கும் இறந்த மனிதரது தலையில் கருப்பு எள் வைக்கலாம். இவர்கள் கெட்ட விஷயங்கள் அண்டாமல் சொர்க்கத்துக்கு போவார்கள்.