Thaipusam: இன்று தைப்பூசத் திருவிழா! முருகன் கோயில்களில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

By SG Balan  |  First Published Feb 5, 2023, 10:20 AM IST

உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூசம் திருவிழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.


முருகனுக்கு விசேஷமான நாள்களில் ஒன்று தைப்பூசம். ஒவ்வொரு ஆண்டும் தை மாத பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் இணைந்து வரும் நாள் தைப்பூசம் என்று அழைக்கப்படுகிறது. அன்று முருகன் கோயில்களில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

முருகன் கோயில்களில் இந்த ஆண்டுக்கான தைப்பூச விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் வந்து முருகனை தரிசனம் செய்துவருகிறார்கள்.

Tap to resize

Latest Videos

undefined

முருகப் பெருமானின் அறுபடை வீடுகள் என்று அழைக்கப்படும் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை ஆகிய ஊர்களில் உள்ள முருகன் கோயில்கள் உள்பட அனைத்து முருகன் கோயில்களிலும் இன்று தைப்பூசத் திருவிழா விமரிசையாகக் கொண்டாப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை இந்த திசையில் பயணம் செய்யக் கூடாது.. மீறி போனால் என்ன நடக்கும் தெரியுமா?

சென்னை வடபழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை, மருதமலை, வயலூர், எட்டுக்குடி முருகன் திருக்கோவில்களிலும் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகளிலும் தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் முருகன் கோயில்களில் தைப்பூச திருவிழாவுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலாரின் ஞானசபையில் தைப்பூசத்தை முன்னிட்டு ஏழு திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. காலை 6 மணி, 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி மற்றும் மறுநாள் அதிகாலை 5.30 மணி என 6 வேளைகளில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடக்கவுள்ளது.

குப்பை இல்லாத சென்னை சாலைகள்.! புதிய திட்டத்தின் மூலம் அதிரடி நடவடிக்கை எடுத்த மேயர் பிரியா

click me!