நாளை தை கார்த்திகை. இந்நாளில் விரதம் இருந்தால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் விரதம் இருந்தால் என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது என்பதை குறித்து இங்கே பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் முருகன் பெருமானுக்கு, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, அழகர் மலை என முருகனுக்கு ஆறு படை வீடு உள்ளது. அவை அனைத்தும் தனித்தனி சிறப்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இங்கு பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படும். அவற்றில் ஒன்று தான் தைக்கிருத்திகை ஆகும்.
இந்நிலையில், நாளைய (ஜன.20) தினத்தில் தை கார்த்திகை காலை 05.37 மணிக்கு தொடங்கி, மறுநாள் காலை (ஜன.21) காலை 06.02 வரை இருக்கும். எனவே, நாளை மாலை 6 மணிக்கு பிறகு முருகனின் பாடல்கள் பாடி முருகனை வழிபடுவது நல்லது.
undefined
கார்த்திகை விரதம் என்றால் என்ன?
பொதுவாகவே, ஒவ்வொரு ஆண்டும் மூன்று கார்த்திகை மட்டும் தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
அவைகள், தை மாதத்தில் வரும் தை கார்த்திகை, கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கார்த்திகை மற்றும் ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கார்த்திகை ஆகும். இவை மூன்றும் முருகன் பெருமானுக்கு உகந்த நாட்கள் ஆகும். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை தை கார்த்திகை, தை பூசம் வருகிறது. இந்நாளில் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்துவார்கள்.
தை கார்த்திகை நன்மைகள்:
ஒன்று...
ஜோதிடம் படி, முருகப்பெருமான் செவ்வாய்க்கு அதிபதி என்பதால் நாளைய தினத்தில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்குச் சென்று தரிசித்து செவ்வாய் பகவானின் அருளை பெறுங்கள். மேலும், செவ்வாய் கிரகத்தால் சிலருக்கு திருமணத்தடை, தோஷம், குடும்பத்தில் பிரச்சினைகள் இன்னும் பலவற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். எனவே, இந்த கார்த்திகை நாளில் முருகனை நினைத்து விரதம் இருந்தால் உங்கள் கவலைகள் மற்றும் பிரச்னைகள் நீங்கி வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
இரண்டு...
இந்த கார்த்திகை தினத்தில், முருகனை வணங்குவதால், உங்களின் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும் நீங்கள் வேண்டியது அனைத்தும் கிடைக்க முருகன் உங்களுக்கு அருள் புரிவார்.
இதையும் படிங்க: ஒருபுறம் மயில், மறுபுறம் சேவல், நடுவில் முருகன்.. மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்..
மூன்று..
திருமணம் ஆகி நீண்ட காலம் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு இந்த கார்த்திகை அன்று முருகனை முழுமனதுடன் வழிப்பட்டால், அவர்களுக்கு கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
இதையும் படிங்க: தொடர்ந்து 12 ஆண்டுகள் கார்த்திகை விரதம் இருந்தால், இந்த பலன்கள் கிடைக்குமாம்..! என்ன தெரியுமா?
தை கார்த்திகை விரதம் இருப்பது எப்படி?
தை கார்த்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே, தை கார்த்திகை அன்று நீரில் நீராடி, முருகனை வழிபட வேண்டும். பிறகு பொதுவான விரதமுறைகளை பின்பற்ற வேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தை கார்த்திகை அன்று செய்யக்கூடாதவை: