பில்லி சூனியத்தால் கவலையா? கருங்காலி மரத்தை பத்தி தெரிஞ்சுக்கோங்க!

By Pani Monisha  |  First Published Jan 3, 2023, 10:45 AM IST

ஒவ்வொருவருக்கும் குலதெய்வம் போல கூடவே இருந்து தீய சக்திகள் அண்டாமல் பார்த்து கொள்கிறது கருங்காலி மாலை. 


பில்லி, சூனியம் போன்ற ஏவல் வேலைகள் நம்மை நெருங்காமல் பாதுகாக்க கருங்காலி மாலை உதவுகிறது. கருங்காலி மரத்தில் செய்த பொருள்கள் நமக்கு பாதுகாப்பு வளையம் போல செயல்படுவதாக நம்பப்படுகிறது. கருங்காலி மரத்தில் மின்காந்த கதிர்வீச்சு இருப்பதாக கூறப்படுகிறது. கருங்காலி மரம் கோயில் கோபுரங்கள், அங்குள்ள சிலைகள், வீட்டு பொருட்களில் உள்ளிட்ட பலவற்றில் உபயோகம் செய்யப்படுகிறது. 

இந்த மரத்திற்கு மருத்துவ பயன்கள் கூட உள்ளன. இதன் வேர் பட்டை ஆகியவை மருத்துவ பலன்களை அருளுகின்றன. குறிப்பாக இதனுடைய பட்டை இரத்த சம்பந்தமான நோய்களிலிருந்து நலம் பெற உதவுகிறது. கருங்காலியை வளையல்கள், மாலைகள், கைப்பட்டைகள் உள்ளிட்ட வடிவங்களில் பயன்படுத்தலாம். பல அற்புதங்களை செய்யும் இந்த கருங்காலி மரத்தின் பயன்களையும், அதன் மாலையை எப்படி அணிய வேண்டும், யார் அணியலாம் என்பது குறித்தும் இங்கு விவரமாக காணலாம்.  

Tap to resize

Latest Videos

ஜோதிட முக்கியத்துவம் 

ஜோதிடரீதியாக கருங்காலியை செவ்வாய் கிரகத்திற்கான உகந்த மரம் என்கிறார்கள். செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வல்லமை கருங்காலிக்கு உள்ளதாக நம்பப்படுகிறது. கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட பொருட்களை அணிந்து கொள்பவர் ஜாதகத்தில் இருந்து செவ்வாய் தோஷம் குறைவதை ஜோதிடர்கள் கணித்துள்ளனர். 

கருங்காலி பொருள்களை எப்போது அணியலாம்? ​​

சுபநாள்களில் கருங்காலியில் செய்யப்பட்ட மாலை, கைப்பட்டை போன்றவற்றை யார் வேண்டுமானாலும் அணியலாம். குறிப்பாக, முருகன் அல்லது வாராஹி அம்மன் கோயிலில் செவ்வாய்கிழமை வழிபட்டு அணிந்தால் நல்ல பலன் கிடைக்கும். அங்கு செல்ல முடியாவிட்டால் வீட்டில் உள்ள தெய்வங்களின் புகைப்படங்களுக்கு அருகில் வைத்த பிறகு அணிவது நல்லது. செவ்வாய் கிரகத்திற்கு உகந்தது கருங்காலி மரம் என்பதால் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது. 

யார் அணியலாம்? 

  • கருங்காலியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம். ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு கருங்காலி மாலை ஏற்றது. 
  • இதனை மாணவர்கள் பயன்படுத்தும்போது நினைவாற்றல் மேம்படுகிறது. சிந்திக்கும் திறனில் மாற்றம் உண்டாகி கல்வியில் சிறந்து விளங்கவும் பயன்படுத்தப்படுகிறது. 
  • தொழிலதிபர்கள் பயன்படுத்தும்போது வணிகத்தில் சிறப்பான முன்னேற்றம் கண்டு, நல்ல லாபம் பெற முடியும். 
  • வேலையில் உயர் பதவி உள்ளிட்ட முன்னேற்றத்தை எதிர்பார்ப்பவர்கள், புதிய வேலை தேடுபவர்கள் கருங்காலியைப் பயன்படுத்தலாம். 
  • கண் திருஷ்டி, மாந்திரீகம் போன்ற தீய சக்திகளால் அவதிபடுபவர்கள் அணியலாம். 
  • கருங்காலி பொருட்கள் நம்மிடம் உள்ள எதிர்மறை விஷயங்களை அகற்றும். 

இதையும் படிங்க; வயாகரா தேவையில்லை உடலுறவு சிறக்க பெண்கள் செய்ய வேண்டிய கெகல் பயிற்சி!

  • கருங்காலி மாலை அணிவதால் நன்மைகள் 
  • ஆன்மீக பாதையில் வாழ உந்துதலை அளிக்கும். ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தின் தோஷங்களை குறைக்கும். ஒவ்வொருவருக்கும் குலதெய்வம் போல கூடவே இருந்து தீய சக்திகள் அண்டாமல் பார்த்து கொள்கிறது கருங்காலி மாலை. அனைத்து தெய்வங்களும் இதில் வசிப்பதாக நம்பிக்கை உள்ளது. நவகிரகங்களின் தாக்கங்களைக் கட்டுப்படுத்தி எதிர்மறையான விளைவுகளை மட்டுப்படுத்தும் வல்லமை கருங்காலிக்கு உள்ளது. கருங்காலி பொருள்களை குலதெய்வமாகக் கருதி அர்ச்சனை செய்து வழிபடலாம்.

மருத்துவ பயன்கள் 

  • கருங்காலி மரத்தில் மின் கதிர்வீச்சுகளை சேமிக்கும் திறன் உள்ளது. ஆகவே இதன் நிழலில் இளைப்பாறினால் கூட நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம். 
  • கருங்காலி கட்டையை நீரில் ஊற வைத்தால் அந்த நீரின் நிறம் சற்று மாறுபடும். அந்த நீரால் குளித்து வர உடலில் இருக்கும் அநேக வலிகள் குணமாகும். 
  • கருங்காலி மரத்தின் வேரை நீரில் ஊற வைத்து, அந்த நீரை சூடாக்கி வடிகட்டி அருந்தினால் வயிற்றில் உள்ள புண்கள் குணமாகும். நீரிழிவு நோயால் அவதிப்பட்டால் இந்த நீர் உங்களுக்கு உதவும். ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். கருங்காலி பொருள்களை பயப்படுத்தும்போது வயிற்றில் உள்ள கொழுப்பு குறைகிறது. 
  • கருங்காலி மரத்தின் பிசினை எடுத்து நன்கு உலர வைத்து பாலுடன் அருந்தினால் உடல் வலுப்பெறும். 
  • கருங்காலி பொருள்கள் பயப்படுத்துவது நம் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சீராக வைக்கும். உடலில் உள்ள வெப்பத்தை குறைக்க கருங்காலி கைப்பட்டையை அணியுங்கள். 

இதையும் படிங்க; sleeping direction: பணம் கொழிக்கணும் நிம்மதியா இருக்கணுமா? இந்த திசையில் தலைவெச்சு படுங்க!

click me!