Vaikuntha Ekadashi 2023: ஸ்ரீரங்கம், திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு; பக்தர்கள் பரவசம்

By Velmurugan sFirst Published Jan 2, 2023, 10:08 AM IST
Highlights

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவில் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டதை அடுத்து பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும், 108 வைணவ தளங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 22ம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு இன்று அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற்றது.

கனிமொழி கூட்டத்தில் பெண் காவலருக்கு திமுக நிர்வாகி பாலியல் தொல்லை - அண்ணாமலை ஆவேசம்

கோவிலில் குவிந்திருந்த பக்தர்கள் ரங்கா ரங்கா என கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் திறப்பைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தற்போதும் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு திருச்சியில் இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை கைப்பற்ற செம பிளான் போட்ட பாஜக..!! நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் மோடி போட்டியா.?

இதே போன்று சென்னை திருவள்ளிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாள், நம்மாழ்வாருக்கு காட்சி அளித்தார். இரவு முதலே கோவிலில் காத்திருந்த பக்தர்கள் சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும், கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். 

இதே போன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பின்னர் உற்சவர் மலையப்ப சாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு ஏழுமலையான் கோவில் 4 டன் மலர்களால் அலங்கறிக்கப்பட்டது.

click me!