sleeping direction: பணம் கொழிக்கணும் நிம்மதியா இருக்கணுமா? இந்த திசையில் தலைவெச்சு படுங்க!

By Pani Monisha  |  First Published Jan 2, 2023, 11:08 AM IST

மனிதனுக்கு உறக்கம் எவ்வளவு அவசியமோ அதைப் போல அவன் உறங்கும் திசையை கவனத்தில் கொள்வதும் அவசியமாகும். 


வாஸ்து சாஸ்திரத்தின்படி, நாம் தூங்கும்போது தவறான திசையில் தலை வைத்திருந்தால் மன அழுத்தம், மரணம், தொழில் விருத்தியின்மை உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்திக்கக் கூடும். ஆகவே உறங்கும் திசையை கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட தவறான திசையில் தலைவைப்பது தான் காரணமாம். 

நாம் உறங்கும் அறையினை குளிர்ச்சியாகவும், வெளிச்சம் குறைவானதாகவும் பார்த்து கொள்ளவேண்டும். வீட்டை கட்டும்போது படுக்கை அறைக்கு வாஸ்து பார்ப்பதோடு நின்று கொள்ளாமல் உறங்கும் திசையும் கணக்கில் கொள்ளவேண்டும். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க; உடம்பெல்லாம் வலியோட சத்தே இல்லாம இருக்கீங்களா? உளுந்து கஞ்சி செஞ்சு சாப்பிடுங்க! 

எந்த திசையில் தூங்கக் கூடாது? 

வடக்கில் தலைவைத்தால் மரண யோகம் என்கிறார்கள் ஜோதிடர்கள். ஒருவர் எந்த திசையில் தலை வைத்தாலும் வடக்கில் மட்டும் வைக்கக் கூடாது இதனால் வீண் பிரச்சினைகள் வரக் கூடும். அது நல்லதல்ல என கருதப்படுகிறது. வடக்கில் தலையும் தெற்கில் காலும் நீட்டும்போது உடல் நலன் கெட்டு போவதாக நம்பப்படுகிறது. மூளை தொடர்பான பிரச்சனைகள் வருகின்றன. அதோடு விடாது பிரச்சைனை தொழில் நலிவடைந்து போகலாம். குடும்பத்தில் அமைதி குலையலாம். சடலங்களை புதைக்கும்போது கூட வடக்கில் தான் வைப்பார்களாம். அதனால் வடக்கில் மட்டும் தலை வைக்கவேண்டாம். 

எந்தெந்த திசைகளில் தலை வைக்கலாம்? 

தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய திசைகளில் தலை வைக்கலாம். அதிலும் கிழக்கு ரொம்பவும் நல்ல திசை. 

இதையும் படிங்க; New year 2023: இந்த பொருளை பாக்கெட்ல போட்டுக்கோங்க... புத்தாண்டில் அதிர்ஷ்டம் பெருகும்!

கிழக்கு 

இந்தத் திசையில் தலை வைக்கும்போது நேர்மறையான ஆற்றல் கிடைக்கிறதாம். இப்படி தொடர்ந்து தூங்குவதால் நிம்மதினா உறக்கம் கிடைக்கும். குழந்தைகள், இளைஞர்கள் இந்த திசையில் கல்வி கற்றால் நல்ல பலன் கிடைக்கும். குறிப்பாக நினைவாற்றல் அதிகமாகும். 

தெற்கு 

தெற்கில் தலை வைத்து வடக்கில் கால் நீட்டி தூங்கலாம். வடக்கில் தலை வைக்கக் கூடாதே தவிர கால் வைக்கலாம். புகழை அடையவும், செல்வம் பெறவும் இந்த திசையில் தலைவைக்கலாம். உடலுக்கு ஆரோக்கியமும் நிம்மதியும் கிடைக்கும். 

மேற்கு 

இந்த திசையில் தலை வைப்பது பல நல்ல பலன்களைத் தரும். வாழ்வின் புதுமையான மாற்றங்களை உண்டாக்கும் திசை மேற்கு. இப்படி தூங்கும் நபர்கள் பணக்காரர்களாகும் வாய்ப்பு அதிகம். 

தூங்கும் திசைகளில் கிழக்கும், தெற்கும் முதன்மையாக கருதப்படுகின்றன. அதன் பிறகு மேற்கு திசை நல்ல பலன்களை அருளக் கூடியது. வடக்கில் மட்டும் தலை வைத்து கொள்ளாதீர்கள். 

இந்த தகவல்கள் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதல்ல. ஜோதிட தகவல்கள் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க; 90'ஸ் கிட்ஸுக்கு கெட்டி மேளச்சத்தம் கேட்கும்.. புஷ்பராகம் அணியுங்கள்!

click me!