மஹாலக்ஷ்மியின் அம்சமான கோமதி சக்கரத்தை வைத்து பூஜை செய்தால் வற்றாத பணமும், செல்வமும் கிடைக்கும்.

கோமதி சக்கரத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா? எப்படி வழிபடுவது? போன்ற தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


கோமதி சக்கரத்தினை வடஇந்தியர்கள் காலம் காலமாக பயன்படுத்தி பூஜை அறையில் வைத்து வழிபடுகின்றனர். இது குஜராத் மாநிலத்தின் துவாரகா என்ற இடத்தில், கோமதி நதி அருகே அதிகமாக கிடைக்கிறது.
 
பெயர்க்காரணம்:


கோமதி சக்கரமானது உருவான புராணக் கதையை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நைமிசாரண்யம் என்ற திருத்தலம் லக்னோவில் உள்ளது. இங்கு பெருமாளின் கையில் இருந்த சக்கரமானது பூமியில் விழுந்து உருண்டோடிய போது, அந்த சக்கரம் அருகிலிருந்த கோமதி நதியில் விழுந்தது. அப்போது அந்த சக்கரத்தின் மேல் சிதறிய நீர்த்துளிகளால் தான் இந்த சக்கரம் கோமதி சக்கரம் என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. ஆக பெருமாளின் இந்த சக்கரம் அன்னை மகாலட்சுமிக்கும் பிடித்த சக்கரம் என்று கூற வேண்டும்.

ஆகையால் தான் இதற்கு இந்த பெயர் வந்தது. இதனை வடமாநிலத்தில் இருப்பவர்கள் அன்னை மகாலட்சுமிக்கு இணையாக பாவித்து தங்கள் பூஜை அறைகளில் வைத்து பூஜை செய்து வாழ்வில் வளமுடன் இருக்கின்றனர். 

அப்படியான கோமதி சக்கரத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா? எப்படி வழிபடுவது? போன்ற தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பூஜை அறையில் எப்படி வைப்பது:

பூஜை அறையில் கோமதி சக்கரத்தை வைக்கும் போது சக்கரம் வெளியில் தெரியுமாறு வைத்தல் வேண்டும். அதாவது சுழி வானத்தைப் பார்த்தவாறு வைக்க வேண்டும்.

பணவரவு கிடைக்கும்:

மஹாலக்ஷ்மியின் அம்சமான இந்த கோமதி சக்கரத்தின் மீது ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் மஞ்சள்,குங்குமம் வைத்து வழிபட்டு வர நம் வீட்டில் நாம் சம்பாதித்த பணம் எப்போதும் குறையாமல் இருந்துக் கொண்டே இருக்கும்.

புண்ணியம் உண்டாகும்:

கோமதி சக்கரத்தை நம் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடுவதால் பல புண்ணிய ஸ்தலத்திற்கு சென்று வழிபட்ட பலனை நம் பெறலாம்.

தோஷ நிவர்த்தி:

நாகதோஷம் இருப்பவர்கள் இந்த கோமதி சக்கரத்தை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வர , தோஷமானது சில நாட்களுக்குள் தானாகவே விலகிவிடும்.

வாஸ்து பிரச்னை சரியாகும்:

வீட்டில் வாஸ்து பிரச்னை ஏதாவது இருப்பின் அந்த தோஷங்களை கோமதி சக்கரமானது  என்பது ஐதீகம் 

கண் திருஷ்டி:

கண் திருஷ்டி உங்களுக்கு இருக்குமாயின் இந்த கோமதி சக்கரம் 3 எடுத்துக் கொண்டு ஒதுக்குபுறமான இடத்தில் சென்று உங்கள் தலையை சுற்றி 7 முறை சுற்றி விட்டு அவைகளை பின்னோக்கி தூக்கி எரிந்து விட்டு திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வர வேண்டும்.

அல்லது

7 கோமதி சக்கரங்களை 1 சிவப்புத் துணியில் கட்டி வீட்டு நிலை வாசலில் தொங்க விட வேண்டும்.இப்படி செய்யும் போது கண் திருஷ்டி, எதிர்மறை ஆற்றலானது ஆகியவை நம் வீட்டிற்குள் வரவே அஞ்சும்.

ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இதனை செய்து வாழ்வை செல்வ செழிப்போடு வாழுங்கள்!

Latest Videos


குருப் பெயர்ச்சி 2023: மேஷத்தில் ராகுவுடன் சஞ்சரிக்க உள்ள குருவால் யோகமா? அல்லது தோஷமா?

click me!