தெற்கு நோக்கிய வீடு: இதை மட்டும் செய்யுங்க ஆயுட்காலம் குறையாது!

By Kalai Selvi  |  First Published Nov 8, 2023, 10:04 AM IST

உங்கள் வீடு தெற்கு நோக்கி இருந்தால் வீட்டின் தோஷங்களை நீக்குவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்...


இந்த உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் சொந்த கனவு வீடு வேண்டும் என்று கனவுகள் இருக்கும். அதில் அவர் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ முடியும். ஆனால் வீட்டில் மகிழ்ச்சி இருக்க அதன் வாஸ்து சரியாக இருக்க வேண்டும். எனவே எப்போதும் திசையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, தெற்கு நோக்கிய வீடு மங்களகரமானதாகக் கருதப்படுவதில்லை. 

ஒரு வீடு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய முழுமையான தகவல்கள் வாஸ்து சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பொருளை வீட்டில் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பது பற்றிய முழுமையான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வாஸ்து சாஸ்திரத்தின்படி தெற்கு திசை யமராஜரின் திசையாக கருதப்படுகிறது. புதிய வீடு கட்ட விரும்புபவர்கள் அதை முறையாக செய்யலாம், ஆனால் ஏற்கனவே வீடு கட்டப்பட்டவர்களுக்கு வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க:  இந்த மாதிரி பொருட்களை தப்பி தவறி கூட வீட்டில் வைக்காதீங்க.. மோசமான விபரீதங்கள் நடக்கும்..!!

உங்கள் வீடு தெற்கு நோக்கி இருந்தால் உடனே எச்சரிக்கையாக இருக்கவும். தெற்கு நோக்கிய வீட்டைக் கொண்டிருப்பதால் மன மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தெற்கு நோக்கிய வீடு ஒரு நபருக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இத்தனை தோஷங்களாலும் தெற்கு நோக்கிய வீட்டில் எப்போதும் நிதி நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும். தெற்கு நோக்கிய வீட்டின் தோஷங்களை நீக்குவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். 

இதையும் படிங்க:  வீடு க்ரிஹ பிரவேசம் செய்யும் முன் "இந்த" விஷயங்களை செய்ய மறக்காதீங்க... அப்போ தான் லட்சுமி குடியிருப்பாள்..!!

வாஸ்து குறிப்புகள்:
உங்கள் வீடு தெற்கு நோக்கி இருந்தால் அதன் தோஷங்களை நீக்க, வீட்டின் பிரதான வாசல் முன்பு வேப்ப மரத்தை நடவும். இவ்வாறு செய்வதால் தெற்கு திசையில் தோஷம் குறையும். உங்கள் வீட்டின் கதவு தெற்கு திசையில் இருந்தால், அங்கு இரண்டு விநாயகர் சிலைகளை கொண்டு வாருங்கள். பிறகு ஒரு சிலையை உள்ளேயும் மற்றொன்றை வெளியேயும் விநாயகப் பெருமானின் பின்புறம் தெரியாத வகையில் வைக்கவும். இதன் மூலம் தெற்கு திசையின் தோஷங்கள் நீங்கும். 

வாஸ்து சாஸ்திரத்தின் படி, இவற்றை ஒருபோதும் தெற்கு திசையில் வைக்க வேண்டாம். இவைகள் தெற்கு திசையில் இருப்பதால் வீட்டில் வசிப்பவர்களின் ஆயுட்காலம் குறைகிறது. 
பூஜை அறை
துளசி செடி
சமையலறை
படுக்கையறை 
காலணிகள் அல்லது செருப்புகள் வைக்குமிடம்..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

வாஸ்துபடி அறைகளை சரியான திசையில் வையுங்கள்:
பூஜை அறை - கிழக்கு, வடகிழக்கு, மேற்கு 
ஹால் - வீட்டின் மையப் பகுதியில் வைக்கவும் 
சமையலறை - வடமேற்கு, தென்கிழக்கு தூங்கும் அறை - மேற்கு, தெற்கு, தென்மேற்கு 
தண்ணீர் தொட்டி - வடகிழக்கு 
கழிப்பறை - வடகிழக்கு

click me!