ராம நவாமியான இன்று வாழ்வின் அனைத்து விதமான அருளையும் நன்மைகளையும் பெற ராம நாமத்தை சொல்லி ஸ்ரீ ராமனிடம் நாம் சரணம் அடைய இந்த மந்திரங்களை சொல்லி வழிபடுங்கள்
அஷ்டமி, நவமி ஆகிய தினங்களில் எந்த ஒரு செயலையும் துவக்காமல், அவ்விரு திதிகளையும் புறக்கணித்தார்கள். ஆகையால் கவலையடைந்த அஷ்டமி, நவமி ஆகிய இருவரும் மகா விஷ்ணுவிடம் சென்று தங்களின் வேதனையையும், குறையையும் கூறினார்கள்.
அதற்கு மகா விஷ்ணு,உங்கள் இருவரையும் உலக மக்கள் அனைவரும் போற்றி வணங்கும் நாள் வரும் என்று வாக்களித்தார். ஆதலால் வாசுதேவர்- தேவகி தம்பதியருக்கு மைந்தனாக அஷ்டமி திதியில் கிருஷ்ணர் பிறந்தார். அன்றைய தினமே கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறோம். நவமி திதியில் தசரதர்-கோசலை தம்பதியருக்கு மைந்தனாக பிறந்தார். அதனையே நாம் ராம நவமி திருநாளாக கொண்டாடுகிறோம்.
இத்தகைய சிறப்பான ஸ்ரீராம நவமி நாளில் முடிந்தவர்கள் உணவு எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருந்து பூஜிக்கலாம். அப்படி செய்ய இயலாதவர்கள் ராமரை மனதார நினைத்து இந்த மந்திரங்களை கூறி வழிபடுங்கள்.
ராம நவாமியான இன்று வாழ்வின் அனைத்து விதமான அருளையும் நன்மைகளையும் பெற ராம நாமத்தை சொல்லி ஸ்ரீ ராமனிடம் நாம் சரணம் அடைய இந்த மந்திரங்களை சொல்லி வழிபடுங்கள். ராமா என்று இரண்டெழுத்து சொன்னாலே நம் வாழ்க்கை வளமும் சிறப்பும் பெற்று சீரும் சிறப்பும் உண்டாகும். இவ்வளவு ஏன்! ராமாயணத்தை முழுதும் படிக்க இயலாதவர்கள் ராமா என்ற இரண்டெழுத்து நாமத்தை சொன்னாலே ஆணவம், காமம்,பேராசை போன்றவை எல்லாம் அழிந்து அன்பும்,அறிவும் பெருகும் என்று கூறுவார்கள்.
இப்படி மனிதரிடம் இருக்கும் தீய விஷயங்களை எல்லாம் அழிக்கும் விதமாக ராமா என்ற ஒற்றை நாமம் செய்வதால் நாம் சகல செல்வாக்கும் பெற முடியும். ராம நாமத்தை சொல்லி ராமனிடம் நாம் சரணம் அடைய நமக்கு மோக்க்ஷத்தை அந்த ராமர் கொடுப்பார்.
மூல மந்திரம்:
மிக எளிய மற்றும் சக்தி வாய்ந்த மந்திரம்.
ஸ்ரீ ராம ஜெயம் !
அர்த்தம்:
ராமருக்கே வெற்றி ,ராமரை வேண்டி இந்த மந்திரத்தை சொன்னால் அமைதி, நம்பிக்கை, வெற்றி கிடைக்கும்.
ராமனின் மிக சக்தி வாய்ந்த மந்திரம்:
ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதஸே ரகுநாதாய நாதாய சீதாய பதயே நமஹ!
அர்த்தம்:
இந்த மந்திரம் ஸ்ரீ ராமனின் பல்வேறு பெயர்களை குறிப்பிடுகிறது. இதனை கூறி வழிபட்டால் ராமனின் அனைத்து நாமங்களையும் சொல்வதற்கு சமம் தவிர நமது வாழ்வில் மங்களம் உண்டாகும்.
கோதண்ட ராம மந்திரம்:
ஸ்ரீ ராம் ஜெய ராம் கோதண்ட ராமா !
அர்த்தம்:
வில்லை ஏந்திய ராமனின் பெயரை உடைய இந்த மந்திரத்தை சொல்லி வர நம்மிடம் இருக்கும் தீய எண்ணங்களை அழிக்கும் .
இன்று ராமருக்கு பிடித்த பானகம் செய்து, இந்த மந்திரங்களையும் கூறி, ஸ்ரீ ராமனின் ஆசீர்வாதங்கள் பெற்று வாழ்வில் முன்னேறுங்கள்!
ராம நவமியான நாளை பானகம் செய்து ராமரை வழிபட்டு வாழ்வில் வறுமை நீங்கி சகல ஐஸ்வர்யங்களையும் பெருங்கள்!